முன்னங்கால்களால்
ஓடி
குட்டி நாய்
கின்னஸ் சாதனை
அமெரிக்காவின்
லாஸ் ஏஞ்சல்ஸ்
நகரை சேர்ந்த
ஜிப் என்ற
பாமரேனியன் நாய், 2 கால்களால் வேகமாக ஓடி
கின்னஸ் சாதனை
படைத்துள்ளது. இதுதொடர்பாக கின்னஸ் புத்தக ஆசிரியர்
கிரெய்க் கிவுண்டே
கூறியதாவது: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த
4 வயது பாமரேனியன்
நாய், நேற்று
முன்தினம் எங்களது
அலுவலகத்துக்கு வந்த போது, மிக சாதாரணமாக
நடந்து வந்தது.
இந்த குட்டி
நாய் என்ன
சாதிக்கப் போகிறது
என பலர்
நினைத்தனர். ஆனால், ஜிப் தனது 2 கால்களால்
வேகமாக ஓடி
சாதனை படைத்து
எங்களை ஆச்சரியத்தில்
ஆழ்த்தியது. ஜிப், தனது பின்னங்கால்களால் 30 அடி தூரத்தை 6 நொடிகளிலும் கடந்தது.
அதேபோல தனது
2 முன்னங்கால்களால் 7 நொடிகளில் வேகமாக
ஓடி 15 அடி
தூரத்தை கடந்தது.
அது குட்டி
நாயாக இருந்தாலும்,
அதற்குள் ஏராளமான
திறமைகள் உள்ளன.
இவ்வாறு கிரெய்க்
கூறினார்.
இந்த சாதனை மூலம், 2 முன்னங்கால்களால் மிக குறைந்த நேரத்தில் 15 அடி தூரத்தை கடந்த நாய் என கின்னஸ் சாதனை புத்தகத்தில்
இடம் பெறுகிறது. ஜிப் செய்யும்
செயல்கள் பல
ஆச்சரியத்தை வரவழைக்கின்றன. மிகவும் க்யூட்டாக இருக்கும்
ஜிப், மற்றவர்களுடன்
கை குலுக்குகிறது.
தனது உணவை
பவுலில் தானே
எடுத்து
வருகிறது. பனி சறுக்கு பலகையில் வேகமாக
சறுக்கி செல்கிறது.
அத்துடன் தனது
முன்னங்கால்களை பதிய வைத்து ஆட்டோகிராப் போடுகிறது.குட்டி நாய்
ஜிப்பின் வித்தியாசமான
செய்கைகள் அனைத்தும்
புகைப்படங்களாக பல்வேறு இணையதளங்களில் வெளியிடப்பட்டது. அதற்கு ஏராளமானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
குறுகிய நேரத்தில்
பல்வேறு சாகசங்களை
செய்யும் குட்டி
நாய் ஜிப்பை
வைத்து டி.வி. நிகழ்ச்சிகளும்
படங்களும் தயாரிக்கப்பட்டு
வருகிறது.
0 comments:
Post a Comment