வெலிகம அல் – முஅஸ்ஸதுல் அஸீஸிய்யாஹ் அரபுக் கல்லூரியில்
மார்க்கத்தில் சட்ட அறிவு பெற்ற உலமாக்களுக்கு
சான்றிதழ் வழங்கும் வைபவம்
வெலிகம அல் – முஅஸ்ஸதுல் அஸீஸிய்யாஹ் அரபுக் கல்லூரியில் 39 உலமாக்களுக்கு மார்க்க சட்டம் குறித்த அறிவில் சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று 2014.08.24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்லூரி மண்டபத்தில் அதிபர் அஷ்- ஷைக் ஏ.ஏ.அலி அஹ்மத் (ரஷாதி) தலைமையில் இடம்பெற்றது.
அஷ்-ஷைக் அபுல் ஹஸன் (மதனி) உப அதிபர், அர்ரஷாத் அரபுக்கல்லூரி, அஷ்-ஷைக் சல்மான் தாஹா (பின்னூரி) விரிவுரையாளர், அல் ரஷாதி அரபுக்கல்லூரி, மாத்தளை மேயர் ஹில்மி முஹம்மத், மற்றும் அரபுக்கல்லூரி தலைவர் உட்பட பல உலமா பெரியார்கள், பிரமுகர்கள் மார்க்கத்தில் சட்ட அறிவு பெற்ற உலமாக்களுக்கு சான்றிதழ்களையும் நினைவு சின்னத்தையும் வழங்கினார்கள்.
0 comments:
Post a Comment