சிரியாவில்
250 இராணுவ வீரர்கள்
ஐ.எஸ்.ஐ.எஸ்.
போராளிகளால் கொல்லப்பட்டனர்
வீடியோ வெளியாகி பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில்
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளால் 250 இராணுவ
வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி
பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கு
எதிராக போராட மற்ற நாடுகளுக்கு அமெரிக்க
அதிபர் பாரக்
ஒபாமா அழைப்பு
விடுத்துள்ளார்.
ஈராக்
மற்றும் சிரியாவில்
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் பல
பகுதிகளை பிடித்துள்ளனர்.
அவற்றை ஒன்றிணைத்து
இஸ்லாமிய நாடு
உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இங்கு போராடும்
போராளிகள் பல
இடங்களை கைப்பற்றி
வேகமாக முன்னேறி வருகிறார்கள். அதை தடுக்க அமெரிக்கா
ஈராக்கில் வான்வெளி
தாக்குதல் நடத்தி
வருகிறது. இதனால்
போராளிகள் அமெரிக்கா
மீது கடும்
ஆத்திரத்தில் உள்ளனர். இதனால் அமெரிக்க பத்திரிகை
நிருபர் போராளிகளால்
தலை துண்டித்து
கொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து
ஈராக்கை தொடர்ந்து
சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின்
நிலைகள் மீதும்
இராணுவ நடவடிக்கை
எடுப்பது தொடர்பாக
அமெரிக்கா பரிசீலித்து
வருகிறது. இந்நிலையில்
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் 250 இராணுவ
வீரர்களை கொன்றுள்ளனர்.
இது தொடர்பான
வீடியோ வெளியாகி
பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம்
சிரியாவின் தாப்கா விமானத் தளத்தை கைப்பற்றுவது
தொடர்பாக போராளிகள்
மற்றும் இராணுவம்
இடையிலான பலர்
பலியானார்கள். விமானத்தளத்தை கைப்பற்றிய போது பின்வாங்கிய சிரியா இராணுவ வீரர்கள் 150க்கும் மேற்பட்ட பேரை போராளிகள் பிடித்தனர். தற்போது இராணுவ வீரர்கள் 250 பேர் கொல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.
சிரியா இராணுவத்தினரை படுகொலை செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ காட்சிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் தங்கள் வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் 100–க்கும் மேற்பட்ட ஆண்கள் உள்ளாடைகளுடன் துப்பாக்கி முனையில் இருப்பது வீடியோ காட்சிகளில் பதிவாகி உள்ளது. இதற்கிடையே போராளிகளுக்கு எதிராக போராட மற்ற நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment