'காந்தி' படத்தை இயக்கிய
ரிச்சர்ட் அட்டென்பரோ நேற்று காலமானார்!

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆங்கிலப் பட நடிகரும், 1982 ஆம் ஆண்டில் வெளியான 'காந்தி' திரைப்படத்தை இயக்கியவருமான ரிச்சர்ட் அட்டென்பரோ நேற்று மரணமடைந்தார். பிரிட்டன் கலையுலகை சேர்ந்த ரிச்சர்ட் அட்டென்பரோ, மகாத்மா காந்தியின் அகிம்சை வரலாற்றை சித்தரிக்கும் 'காந்தி' படத்தை இயக்கியதன் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களிலும் நீங்காத இடம் பிடித்தவராவார்.

சுமார் 60 ஆண்டுகளாக திரையுலகில் பணியாற்றிய அனுபவம் நிறைந்த ரிச்சர்ட் அட்டென்பரோ, ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு மனிதநேய காரியங்களுக்கான நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மபூஷன்', பிரிட்டனின் உயரிய 'லார்ட்' உள்ளிட்ட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்ற இவர், உடல்நலக்குறைவால்  தனது 90-வது வயதில் நேற்று காலமானார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top