இம்ரான்கான்,
காதிரியுடன் பேச்சு
பாகிஸ்தான் இராணுவம் மத்தியஸ்தம்
பாகிஸ்தானில்
அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே
ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அந்நாட்டு இராணுவம் மத்தியஸ்தம்
செய்கிறது. இம்ரான்கான் மற்றும் காதிரியுடன்
அந்நாட்டு இராணுவ
தளபதி ராஹில்
ஷெரிப் சந்தித்து
பேசினார்.
பாகிஸ்தானில்
கடந்த ஆண்டு
நடந்த பொதுத்தேர்தலில்
பெருமளவு மோசடி
நடந்துள்ளதாக கூறி, பிரதமர் நவாஸ் ஷெரீப்
பதவி விலகக்கோரி,
முக்கிய எதிர்க்கட்சிகளான
இம்ரான் கானின்
தெஹ்ரீக் இ
இன்சாப் கட்சியும்,
மத குரு
தார் உல்
காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சியும்
போர்க்கொடி உயர்த்தி 2 வாரங்களாக போராட்டம் நடத்தி
வருகின்றன.
இது
அரசின் நிலைத்தன்மைக்கு
கேள்விக்குறியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக
பிரதமர் நவாஸ்
ஷெரீப், அந்த
நாட்டின் இராணுவ
தலைமை தளபதி
ரஹீல் ஷெரீபை
சந்தித்து 2 தினங்களுக்கு முன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில்
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நேற்று பாராளுமன்றம், தேர்ந்தெடுக்கப்பட்ட
மக்கள் பிரதிநிதிகள்
மீது நம்பிக்கை
தீர்மானம் கொண்டு
வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக மொத்தம்
உள்ள 10 கட்சிகளில்
9 கட்சிகள் வாக்களித்தன.பாகிஸ்தானில் பிரதமர் பதவி
விலகக்கோரி எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு
மத்தியில், பாராளுமன்றம் மீதான நம்பிக்கை தீர்மானம்
நிறைவேறியது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி
என நவாஸ்
ஷெரீப் பெருமிதம்
தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே
இப்பிரச்சனைகளுக்கு அந்நாட்டு இராணுவம்
மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ
நடவடிக்கையும் இராணுவம் எடுத்துள்ளது. இம்ரான் கானின்,
மத குரு
தார் உல்
காதிரியுடன் அந்நாட்டு இராணுவ தளபதி ராஹில்
ஷெரிப் பேச்சுவார்த்தை
நடத்தினார். ஆனால் அதில் தீர்வு ஏற்பட்டதாக
தெரியவரவில்லை. ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து
இம்ரான்கான் பின்வாங்க மறுத்துவிட்டார்.
பேச்சுவார்த்தையை அடுத்து பேசிய இம்ரான்கான்,
பேச்சுவார்த்தை நடத்த அரசு
எப்போது இராணுவத்தை
கேட்டுக் கொண்டதோ,
அப்போதே அரசு
அரசியல் தீர்வு
காணுவது குறித்து
நினைக்கவில்லை என்பதை தெளிவு படுத்தியுள்ளது. என்று
கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் எந்த பிரச்சனையை முன்வைத்து
போராடி வருகின்றனரோ
அது குறித்து
நீதி விசாரணை
மேற்கொள்ள இராணுவம்
சம்மதம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment