ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்
சிரியா விமானதளத்தை கைப்பற்றினர்
500க்கும் மேற்பட்டோர்  போராட்டத்தில் பலி

சிரியா இராணுவம் வசம் இருந்த விமான தளத்தை .எஸ்..எஸ். போராளிகள் கைப்பற்றியுள்ளனர். விமானம் தளத்தை கைப்பற்றுவது தொடர்பாக நடந்த சண்டையில் இரதரப்பை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என அறிவிக்கப்படுகின்றது.
 ஈராக் மற்றும் சிரியாவில் .எஸ்..எஸ். போராளிகள் பல பகுதிகளை பிடித்துள்ளனர். அவற்றை ஒன்றிணைத்து இஸ்லாமிய நாடு உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இங்கு போராடும் போராளிகள் பல இடங்களை கைப்பற்றி தீவிரமாக முன்னேறி வருகிறார்கள். அதை தடுக்க அமெரிக்கா ஈராக்கில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் போராளிகள் அமெரிக்கா மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இதனால் அமெரிக்க பத்திரிகை நிருபர் போராளிகளால் தலை துண்டித்து கொல்லப்பட்டார்.
.எஸ்..எஸ். போராளிகளைப் பொறுத்தமட்டில், அவர்கள் ஈராக்கிலும் சரி, வேறு எங்கும் சரி, நம்மவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்கிறார்கள். என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரியாவிலும் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் தீட்டி வருகிறது. இந்நிலையில் சிரியா இராணுவம் வசம் இருந்த விமான தளத்தை .எஸ்..எஸ். போராளிகள் கைப்பற்றியுள்ளனர். நேற்று நடைபெற்ற கடும் சண்டையின் இறுதியில் போராளிகள் விமானதளத்தை கைப்பற்றிவிட்டனர்.
விமான தளத்தை கைப்பற்றுவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து நேற்று வரையில் நடைபெற்ற சண்டையில்  சுமார் 346 போராளிகள் மற்றும் 170க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. சிரியாவில் போர் தொடங்கியதில் இருந்து தாப்கா விமானத் தளத்தை கைப்பற்றுவது தொடர்பான சண்டையில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையே அதிகம் என்று கூறப்படுகிறதுஇந்த விமானத் தளம் மட்டுமே அப்பகுதியில் இராணுவம் பிடியில் இருந்தது. அதனையும் போராளிகள் தற்போது தங்களது வசம் கொண்டு வந்துள்ளனர். போராளிகள் சிரியா மற்றும் ஈராக்கில் பெரும் பகுதியை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்
போராளிகள் நிலையாக இருக்கும் ராக்கா சிட்டி அருகே விமானதளம் கைப்பற்றப்பட்ட வெற்றி கொண்டாடப்பட்டுள்ளது. பல்வேறு மசூதிகளில் விமானதளம் கைப்பற்றப்பட்ட செய்திகள் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. சிரியா இராணுவ வீரர்களின் தலைகளையும் போராளிகள் காண்பித்துள்ளனர்என்று தகவல்கள் தெரிவித்துள்ளனமுன்னதாக சண்டை நடைபெற்றபோது சிரியா இராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுதொடர்ந்து அங்கு தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும்இராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சிரியா இராணுவ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும்பின்வாங்கிய சிரியா இராணுவ வீரர்கள் 150 பேரை போராளிகள் பிடித்து வைத்துள்ளனர்என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இப்பகுதியில் கடந்த ஒரு வாரங்களில் பல்வேறு இராணுவ தளங்களை கைப்பற்றியுள்ள போராளிகள் அங்கியிருந்த ஆயுதங்களை கொண்டு மேலும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top