இலங்கை அரசு இந்தியாவுக்கு அளித்த
வாக்குறுதியை நிறைவேற்றவில்லை:
சென்னையில்
சம்பந்தன் பேட்டி
இந்திய
அரசுக்கு அளித்த
வாக்குறுதியை இலங்கை நிறைவேற்றவில்லை என்று சென்னையில்
தமிழ் தேசிய
கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.
சென்னையில்
பாரதிய ஜனதா
கட்சி நிர்வாகிகளை
தமிழ்
தேசியக் கூட்டமைப்பு
எம்பிக்கள் சந்தித்து பேசினர். இதனையடுத்து
செய்தியாளர்களை சந்தித்த சம்பந்தன் கூறியதாவது:-
பாரதிய
ஜனதா தமிழக
நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தை திருப்தியாக
அமைந்தது. இலங்கையில்
13-வது சட்டத்திருத்தத்தை
அமுல்படுத்த வேண்டும்.
இலங்கையில்
வடக்கு கிழக்கு
பகுதிகளாக ஒரே
மாகாணமாக ஆக்கப்பட
வேண்டும். இலங்கை
அரசுடன் இதுவரை
நடத்திய பேச்சுவார்த்தையில்
எந்த முன்னேற்றமும்
இல்லை. தமிழர்களுக்கு
அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இலங்கைத் தமிழர்
பிரச்னையில் மாற்றம் ஏற்படுமென பிரதமர் நரேந்திர
மோடி உறுதியளித்துள்ளார்.
இந்திய
அரசுக்கு அளித்த
வாக்குறுதியை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. அதிகாரப்பகிர்வையும் முறையாக
செயல்படுத்தாமல் இழுத்தடித்து வருகிறது. வடக்கிலும் கிழக்கிலும்
தமிழர்க்ள் கலாச்சாரத்தை அழிக்க இலங்கை அரசு
முயற்சி செய்து
வருகிறது. ஒருங்கிணைந்த
இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழ
வேண்டும் என்பதே
இந்தியாவின் விருப்பமாக உள்ளது. எனவே நாட்டை
பிரித்து தீர்வு
ஏற்படுத்த வேண்டும்
என்று நாங்கள்
கோர முடியாது.
இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment