நவாஸ் ஷெரீப் 30 நாட்கள்
மட்டும் பதவி விலக வேண்டும்
இம்ரான்கான்
மீண்டும் கோரிக்கை
பாகிஸ்தான்
பிரதமர் நவாஸ் ஷெரீப் 30 நாட்கள் மட்டும்
பதவி விலக
வேண்டும் என்று
இம்ரான்கான் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில்
பிரதமர் நவாஸ்
ஷெரீப்புக்கு எதிராக இம்ரான்கானின் தெஹ்ரிக் இ
இன்சாப் கட்சி
போராடி வருகிறது.
2013-ஆம் ஆண்டு
நடந்த தேர்தலில்
முறைகேடுகள் நடந்ததாகவும், அதுபற்றி விசாரணை நடத்த
ஏதுவாக பிரதமர்
நவாஸ் ஷெரீப்
பதவி விலக
வேண்டும் என்றும்
இம்ரான்கான் கோரி வருகிறார். இதற்கு பாகிஸ்தான்
அரசு மறுத்துவிட்டது.
இந்த
நிலையில், தேர்தல்
முறைகேடு குறித்து
கமிஷன் சுதந்திரமாக
விசாரணை நடத்த
ஏதுவாக பிரதமர்
ஷெரீப் 30 நாட்களுக்கு
மட்டும் பதவி
விலக வேண்டும்.
விசாரணையில் அவர் மீது எந்த குற்றமும்
இல்லை என்பது
நிரூபணமானால் அவர் மீண்டும் பதவிக்கு திரும்பலாம்
என்று இன்ரான்கானின்
கட்சி கூறி
வருகிறது. இதனை ஏற்க மறுத்த
பாகிஸ்தான் அரசு, பதவி விலகல் தவிர
அவர்களது மற்ற
கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்த
பிரச்சினையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
0 comments:
Post a Comment