பாகிஸ்தான் சமரச முயற்சியில் இராணுவ தளபதி
மீண்டும் இராணுவ
ஆட்சியா?
பாகிஸ்தானில்
நவாஸ் ஷெரீப்
அரசுக்கு எதிரான
போராட்டத்தால் அரசியல் சிக்கல் முற்றி வரும்
நிலையில் இராணுவ
தளபதி ரஹீல்
ஷெரீப் சமரச
முயற்சியில் இறங்கியுள்ளார்.
அரசுக்கு
எதிராக போராட்டம்
நடத்தி வரும்
பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித்
தலைவரும், முன்னாள்
கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கான், மதத்
தலைவர் தாஹிர்
உல் காத்ரி
ஆகியோரிடம் பேச்சு நடத்தியுள்ள ரஹீல் ஷெரீப்,
அடுத்ததாக பாகிஸ்தான்
பிரதமர் ஷெரீப்பை
சந்தித்து பேச
இருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது.
சமரச
முயற்சியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது பாகிஸ்தானில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம்
அந்நாட்டில் மீண்டும் இராணுவ ஆட்சி ஏற்பட
வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. இதற்கு
முன்பு 1999 ஆம் ஆண்டு ஷெரீப் பிரதமராக
இருந்தபோது அவரை கவிழ்த்து விட்டு இராணுவ
தளபதி பர்வேஷ்
முஷாரப் பாகிஸ்தானில்
இராணுவ ஆட்சியை
ஏற்படுத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.
பிரதமர்
ஷெரீப் தேர்தலில்
முறைகேடு செய்து
வெற்றிபெற் றுள்ளார். எனவே அவர் பதவி
விலக வேண்டும்
என்று இம்ரான்
கான், தாஹிர்
உல் காத்ரி
ஆகியோர் ஆகஸ்ட்
14 ஆம் திகதி
முதல் தொடர்
போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைந்துள்ளனர்.
நாடாளு மன்றத்தையும்
அவர்கள் முற்றுகை
யிட்டுள்ளனர். இதனால் நவாஸ் தலைமையிலான அரசு
கடும் நெருக்கடியில்
உள்ளது. எதிர்ப்பாளர்களுடன்
அரசு தரப்பினர்
பல கட்ட
பேச்சு நடத்தியும்
பிரச்சினைக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இந்நிலையில்
பிரச்சினையை தீர்ப்பதாக கூறி இராணுவம் களமிறங்கியுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களுடன்
மேற்கொள்ள இராணுவ
தளபதியின் உதவியை
நாடியதாக வெளியான
செய்தியை நவாஸ்
திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
0 comments:
Post a Comment