யுனிசெப் அமைப்பு தகவல்
காஸாவில் இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலுக்கு
469 பிஞ்சுக் குழந்தைகள் பலி...
பாலஸ்தீனத்தின்
காஸா பகுதியில்
இஸ்ரேல் நடத்தி
வரும் கொடூரத்
தாக்குதலுக்கு இதுவரை 469 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக
யுனிசெப் அமைப்பு
தகவல் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பான யுனிசெப் ஐ.நா சபையில்
இத்தகவலை தெரிவித்துள்ளது.
காஸா பகுதியை
நிர்வகித்து வரும் ஹமாஸ் இயக்கத்தினரை அழிக்கிறோம்
என்ற பெயரில்
பாலஸ்தீனர்களை அழிக்கும் வகையில் கொடூரத் தாக்குதலை
இஸ்ரேல் நடத்தி
வருகிறது.
கடந்த
ஒரு மாதத்திற்கும்
மேலாக இஸ்ரேலின்
கொடுந்தாக்குதலுக்கு 2 ஆயிரம் பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரம் பேர்
படுகாயமடைந்துள்ளனர். சுமார் 3 லட்சம்
பேர் இருக்கும்
இடங்களை விட்டு
வெளியேறி அகதிகளாக
முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். யுனிசெப்
அமைப்பு வெளியிட்டுள்ள
அறிக்கையில் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் மொத்தம்
469 பிஞ்சு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில்
கடந்த 48 மணி
நேரத்தில் இஸ்ரேலால்
படுகொலை செய்யப்பட்ட
9 குழந்தைகளும் அடங்கும் என்றும் யுனிசெப் அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. காஸா பகுதி குழந்தைகளின் உளவியல்
மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்
யுனிசெப் அமைப்பு
மேலும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment