இந்தியாவிற்கான ஐஎஸ்ஐஎஸ் போராட்டக் குழு தேர்வாளர்

ஈராக்கில் பலி?

இந்தியாவிற்கான ஐஎஸ்ஐஎஸ் போராளிகளை தேர்வு செய்பவரான ஆரிப் மஜீத் ஈராக்கில் சண்டையில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் இதுவரை 3 பேரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐஎஸ்எஸ் போராட்ட அமைப்பு இரு நாடுகளின் அரசுக்கு எதிராக பெரும் சண்டையில் ஈடுபட்டு  வருகின்றது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கை ஈராக்கில் ஓங்கி வருகிறது..இந்நிலையில் விபரீதத்தை மிகமெதுவாகவே உணர்ந்த அமெரிக்கா தறபோது விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது.
இந்த நிலையில் மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் .எஸ்..எஸ். போராட்ட அமைப்பில் சேர்ந்து இருப்பதாக கடந்த ஜூலையில் பரப்பரப்பு தகவல் வெளியாகியது. இவர்களில் தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த ஏஜாஜ் பக்ருதீன் மஜீத் என்பவரின் மகன் ஆரிப் என்பதும், மற்ற 3 பேர் தானே நகரை சேர்ந்த தன்வீர் சேக், அமன் நைம், சகீன் பாரூக் என்பதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் 20 வயது பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவிற்கான ஐஎஸ்ஐஎஸ் போராளிகளை தேர்வு செய்பவரான ஆரிப் மஜீத் ஈராக்கில் சண்டையில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் இதுவரை 3 பேரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

சகீன் பாரூக், ஆரிப் ஈராக்கில் இருக்கும் இடத்தை அறிந்து அவர் நன்றாக உள்ளாரா என்று விசாரித்துள்ளார். அப்போது ஆரிப் இறந்துவிட்டார் என்று சகீன் பாரூக்கிற்கு தெரியவந்தது. செய்வாய் அன்று தானேயில் உள்ள அவரது வீட்டிற்கு போன் செய்த சகீன் இதனை தெரிவித்தார்.” என்று தன்வீர் சேக் மாமா தெரிவித்துள்ளார். என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் உறுதியான அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இணையதளங்களில் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top