தெற்குசூடானில்
ஐ.நா. ஹெலிகாப்டர்
சுட்டு வீழ்த்தப்பட்டது
தெற்குசூடானில்
கடந்த 8 மாதங்களாக
உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதனால் அங்கு
வாழும் மக்கள்
சிரமப்பட்டு வருகிறார்கள். அங்கு ஐ.நா. அமைதிப்படையினர் நிவாரணப்
பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்தநிலையில்
எண்ணெய் வளமிக்க
இந்த நாட்டின்
வடபகுதியில் உள்ள வாவ் நகரில் இருந்து
பெண்டியு நோக்கி
நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஐ.நா. அமைதிப்படையினர்
ஒரு ஹெலிகாப்டரில்
சென்றனர். இந்த
ஹெலிகாப்டரில் விமான ஓட்டி உட்பட 4 பேர்
பயணம் செய்தனர்.
பெண்டியு
நகரில் இருந்து
10 கிலோ மீட்டர்
தூரத்தில் ஹெலிகாப்டர்
சென்றபோது, போராளிக்குழுவினர் ஹெலிகாப்டரை
சுட்டு வீழ்த்தினர்.
இதில் ஹெலிகாப்டர்
கீழே நொறுங்கி
விழுந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த
3 பேர் பரிதாபமாக
உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில்
சிகிச்சை பெற்று
வருகிறார். இவர்கள் அனைவரும் ரஷியாவைச் சேர்ந்தவர்கள்
ஆவர்.
ஹெலிகாப்டர்
மீது போராளிக்குழுக்கள்
தான் தாக்குதல்
நடத்தியதாக ரஷிய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஐ.நா. இந்த
தகவலை உறுதிபடுத்தவில்லை.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த
அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
0 comments:
Post a Comment