பாடசாலைகளுக்கும்
பெற்றோர்களுக்கும்
இடையிலான உறவு
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
சில
நாட்களுக்கு முன்பு நான் கண்ட
பெற்றோர்களினது அழகிய முன் மாதிரி ஒன்றை
வைத்து நான்
உங்களுடன் சில
விடயங்களை பகிர
விரும்புகிறேன்.
நான்
குறித்த சில
நாட்களாக ஒரு
சிங்கள பாடசாலை
ஒன்றின் அருகே
அமைந்துள்ள வீதியால் தேவை நிமிர்த்தம் செல்வது
வழமை. ஒரு
நாள் வழமை
போன்று சென்று
கொண்டிருக்கும் போது,வழமைக்கு மாற்றமாக அங்கே
பெற்றோர்கள் பலர் சிரம தானப் பணியில்
ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.
எமது
பாடசாலைகளில் இவ்வாறு நடைபெறுகிறதா? என நான் சிந்தித்துப்பார்த்தேன்.நான் படித்த
காலப்பகுதியில் இவ்வாறானதொரு நிகழ்வு நடைபெறவே! இல்லை.
நான்
இது வரை
இவ்வாறானதொரு நிகழ்வு எனது பிரதேசத்திலோ!வேறு
பிரதேசத்திலோ நடைபெற்றதாக அறிந்தததும் இல்லை.
ஏன்?
நான் ஆண்டு
9 வரை படித்த பாடசாலையில் நாளந்தம் பாடசாலை
மாணவர்களே!பாடசாலை
வளாகத்தை சுத்தம்
செய்வர்.
தன்
பிள்ளை கல்வி
கற்கும் வளாகத்தை
சுத்தம் செய்யவே!
மற்றோரை எதிர்
பார்க்காத அப்
பிள்ளைகளின் பெற்றோர்கள் அப் பிள்ளைகளின் படிப்பில்
எந்தளவு கரிசனை
காட்டுவார்கள்.??
எமது
பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி மீது கொண்டிருக்கும்
அக்கறைக்கும்,இப் பெற்றோர்கள் கொண்டிருக்கும் அக்கறைக்கும்
இடையே எந்தளவு
வேறு பாடு
உள்ளது? எமது
கல்வி வீழ்ச்சி
எதனால்?? என்பதை
அறிய இதனையும் ஒன்றாய்
கோடிடலாம்.
பாடசாலைக்கும்,அநேகமான பெற்றோர்களுக்கிடையிலான
உறவு பாடசாலைக்
கதவு மட்டுமே
இன்று நிலவிக்
கொண்டிருக்கிறது.பாடசாலை அதிபர்களோ!ஆசியர்களோ!அழைத்தால்
கூட பல
பெற்றோர்கள் செல்லாமல் இருக்கும் நிலையே!பல
இடங்களில் காணப்படுகிறது.
நீண்ட
நாள் விடுமுறை
முடிந்தால் பாடசாலை மாணவர்கள் பலர் சில
நாட்களுக்கு பாடசாலை செல்ல மாட்டார்கள்.காரணம்
கேட்டால்"அங்கே சென்றால் ஒட்டரை துடைக்க
வேண்டும்,தூசு
தட்ட வேண்டும்"போன்ற காரணங்களை
எடுத்து வைப்பார்கள்.இதை பெற்றோர்கள்
செய்து கொடுத்தால்
என்ன..?எனக்
கேட்டால்.தொழிலாளர்கள்
எதற்கு உள்ளார்கள்?என கேள்வி
எழுப்பும் பெற்றோர்களும்
எம்மில் இருக்கத்
தான் செய்கிறார்கள்.
இலங்கையின்
அரசாங்கப் பாடசாலைகளில்
வகுப்பு அறைகளை
சுத்தம் செய்யும்
அளவு வேலையாட்களைக்
கொண்ட வளம்
பொருந்திய பாடாசாலைகள்
மிகக் குறைவு.இலங்கையில் இலவச
கல்வி முறைமை
நிலவுவதால் இதனையும் எதிர் பார்ப்பது ஏற்கத்தக்கது
அல்ல.
எமது
பிள்ளைகள் சுகதாரக்
குறைவோடு புழங்குவார்களாக
இருந்தால் அவர்கள்
சுகாதார ரீதியான
தாக்கங்களுக்கு உட்படலாம்.அவர்கள் சுகாதாரக் குறைவுத்
தாக்கங்களுக்கு உட்பட்டால் பாதிக்கப்படுவது
யார்?? எமது
பிள்ளைகளும்,நாமும் அல்லவா?
மேலும்,இவ்வாறான சிரம
தானப் பணிகளினூடாக
பெற்றோர்களிற்கும் பாடசாலை ஆசிரியர்கள்,அதிபர்,நிர்வாகத்தினருக்கும்
இடையில் ஆரோக்கியமான
உறவு பேணப்படும்.இதுவே!தங்கள்
பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அபரிதமான தாக்கத்தை
விளைவாக்கும்.
எனவே,இதனையெல்லாம் கவனத்திற்
கொண்டு மேற்
குறித்த பாடசாலை
போன்று எம்
பாடசாலைகளிலும் பெற்றோர்கள் கரிசனை கொள்ள வேண்டும்
என்பதே எமது விருப்பமாகும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.