ஹஜ் கோட்டாப் பகிர்வின் போது எழுந்த பிரச்சனையால்
விளைவாக்கப்படக் கூடிய விளைவுகள்..!!

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)

சுய நலம் கொண்ட எம்மவர்களின் சில அறியாமைச் செயற்பாடுகள் சமுகத்திற்கு மிகப் பாரிய விளைவுக்களை ஏற்படுத்துகின்றன.அந்த வகையில் எம்மவர்களின் பல விடயங்களை சுட்டிக்காட்ட முடியுமாக இருப்பினும்,அண்மையில் நடந்தேறிய ஹஜ் கோட்டாப் பகிர்வு எந்தளவு முஸ்லிம்களிடத்திலும்,இஸ்லாத்திலும் தாக்கம் செலுத்தப்போகிறது என்பதை நாம் சற்று ஆராய்வதனூடாக இவ்வாறன செயற்பாடுகள் எதிர் காலத்தில் நடந்தேறாது தடுக்க முஸ்லிம்களாகிய நாம் ஒவ்வொருவரும்  கடமைப்பட்டுள்ளோம்.
" 2250 கோட்டாக்களை 89 முகவர்களிடையே பகிர வேண்டிய ஹஜ் கோட்டாப் பகிர்வு விடயத்தில் அநீதி நடந்ததாக பிரச்சனைகள் எழுந்து நீதி வேண்டி நீதி மன்றம் சென்ற போது,நீதி மன்றமோ  கோட்டாப் பகிர்வை புத்தாசன அமைச்சிடம் கையளித்தது."
அரசாங்கமானது  முஸ்லிம்களின் மத விவகாரமான ஹஜ் விடயத்தை  முஸ்லிம்களாகிய நீங்களே கையாளுங்கள் எனத் தந்த போது,எமது செயற்பாடுகளின் விளைவுகள், எங்கே எம்மைக் கொண்டுசென்றது தெரியுமா..??
"நீதி,நேர்மை,சமாதானத்தை போதிக்கும் மதத்திலுள்ள நாம் எங்களால் தீர்க்க முடியாது என்ற முடிவிற்கு வந்து  நீதி,நேர்மை,சமாதானத்தை போதிக்க  வேண்டியவர்களிடம் போய் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துரைக்கும் ஹஜ் விடயத்தில் எங்களவர்கள் சுயநல வாதிகள்.நீங்களே தீர்த்துத் தாருங்கள்"என கை கட்டி நிற்க வேண்டிய மிகக் கேவலமான  நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
இதை விடக் கேவலம் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு என்னதான் உண்டு?? 
நாம் எமது மதத்தை பேரிண மக்களிடம் எடுத்துச் செல்லுகின்ற போது நீதி,நேர்மை,சமாதானத்தை தேடி எங்களிடம் வந்த நீங்களா??எங்களிடம் நீதி,நேர்மை,சமாதானத்தை போதிக்கிறீர்கள்??என வினா எழுப்பினால் எங்கள் முகத்தை எங்கே கொண்டு வைப்பது..??
ஹஜ் சமூக ஒற்றுமைக்கு வித்திடுகிறது.என நாம் கூறினால் முதல் ஹஜ் இற்கு அழைத்துச் சென்று வழி காட்டும் நீங்கள் ஹஜ் கோட்டாப் பகிர்வு விடயத்தில் ஒற்றுமையாக இருந்தீர்களா??எனக் கேட்டால் யாது பதிலளிக்க இயலும்??
இனி என்ன??வழமையான கதையான முஸ்லிம்களை  பார்க்க வேண்டாம்,இஸ்லாத்தை பாருங்கள் எனக் கூறி இஸ்லாத்தை பரப்ப வேண்டிய நிலைக்கு உந்தப்படுவோம்.
இவ்வாறான செயற்பாடுகள் எம்மவர்களிடையே மிகைத்துக் காணப்படுகின்ற போது எமது மதம் நீதி,நேர்மை,சமாதானத்தை, ஒற்றுமையை போதிக்கிறது என்றால் முதலில் நம்புவார்களா?? நம்பத் தான் முயற்சிப்பார்களா..??
எம் சமுகம் அரங்கேற்றிய இன் நிகழ்வு மக்களை இஸ்லாத்தை அறிவதை விட்டும் கூட தூரமாக்குகின்றது என்றால் நாம் எவ்வளவு பெரிய பாவிகள்??
உண்மையில் ஹஜ் கோட்டாப் பகிர்வை நேரடியாக அரசாங்கம் கையாண்டிருந்தாலோ அல்லது புத்தாசன அமைச்சு கையான்டிருந்தாலோ இந்தப் பிரச்சனைகள் இவ்வளவு தூரம் விஸ்வரூபம் எடுத்திருக்காது.வேற்று மதத்தினரிடையே முஸ்லிம்களும் தலை குனிய வேண்டிய நிலையும்  ஏற்பட்டிருக்காது.ஆனால்,முஸ்லிம்களாகிய  நாம் "பார்த்தீர்களா..?அரசின் செயற்பாட்டை"என தூசித்து தள்ளி இருப்போமல்லவா??
இப்போது என்ன நடக்கப் போகிறது தெரியுமா..??
பிரச்சனை முற்றி சந்தைக்கு வந்ததால் அமைச்சர் பௌசி தனது நிலைப்பாட்டை சரி என நிரூபிக்க ஹஜ் கோட்டாப் பகிர்வு விடயத்தை  அரசிடம் ஒப்படைக்கப்போகிறாராம்.நீதி மன்றம் ஒப்படைத்தது போன்று அரசு புத்தாசன அமைச்சிடம் ஹஜ் கோட்டாப் பகிர்வு விடயத்தை ஒப்படைத்தால் எங்கனம் எம்மால் ஓல மிட முடியும்..??
பள்ளிவாயல் ஒன்றை நாம் நிறுவுவதற்கு  புத்தசாசன அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்று உள்ள போது,புத்தசாசன அமைச்சிடம் இது ஒப்டைக்கப்படுவது  என்பது ஓர் பெரிய விடயமா??
ஏற்கனவே பள்ளிவாயல் ஒன்றை நாம் நிறுவுவதற்கு  புத்தாசன அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிலையில் உள்ள நாம்,மென் மேலும் எமது செயற்பாடுகளில் புத்தாசன  அமைச்சு நுழைய நாம் அனுமதிப்பது முஸ்லிம் சமுகத்திற்கு அவ்வளவு உசிதமானது அல்ல.
எனினும்,முன்பு  அரசு செய்தது போன்று விசேட குழு ஒன்றிடம் இது ஒப்படைக்கப் படலாம் என்றும் நம்பப் படுகிறது.
எம்மவர்கள் சிலர் இலகுவாக செய்ததன் விளைவு எம்மை எங்கே??கொண்டு சேர்க்கப்போகிறது பார்த்தீர்களா??
எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்.
அல்லாஹ்வைப் பயந்து எமது செயற்பாடுகளை அமைப்போமாக.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top