எதிர்க்கட்சிகளின்
போராட்டத்துக்கு மத்தியில்
பாகிஸ்தான்
பாராளுமன்றம் மீதான
நம்பிக்கை
தீர்மானம் நிறைவேறியது
பாகிஸ்தானில்
பிரதமர் பதவி
விலகக்கோரி எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு
மத்தியில், பாராளுமன்றம் மீதான நம்பிக்கை தீர்மானம்
நிறைவேறியது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி
என நவாஸ்
ஷெரீப் பெருமிதம்
தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில்
கடந்த ஆண்டு
நடந்த பொதுத்தேர்தலில்
பெருமளவு மோசடி
நடந்துள்ளதாக கூறி, பிரதமர் நவாஸ் ஷெரீப்
பதவி விலகக்கோரி,
முக்கிய எதிர்க்கட்சிகளான
இம்ரான் கானின்
தெஹ்ரீக் இ
இன்சாப் கட்சியும்,
மத பெரியார்
தார் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக்
கட்சியும் போர்க்கொடி
உயர்த்தி 2 வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன.
இது
அரசின் நிலைத்தன்மைக்கு
கேள்விக்குறியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக
பிரதமர் நவாஸ்
ஷெரீப், அந்த
நாட்டின் இராணுவ
தலைமை தளபதி
ரஹீல் ஷெரீபை
சந்தித்து 2 தினங்களுக்கு முன் ஆலோசனை நடத்தினார்.
இந்த
நிலையில் பாகிஸ்தான்
பாராளுமன்றத்தில் நேற்று பாராளுமன்றம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது நம்பிக்கை
தீர்மானம் கொண்டு
வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக மொத்தம்
உள்ள 10 கட்சிகளில்
9 கட்சிகள் வாக்களித்தன. தீர்மானம் நிறைவேறியது. அதைத்
தொடர்ந்து பாராளுமன்றத்தில்
பிரதமர் நவாஸ்
ஷெரீப் பேசினார்.
அப்போது அவர்
கூறியதாவது:-
இது
தனிப்பட்ட நபர்களுக்கு
கிடைத்த வெற்றி
அல்ல. அரசுகள்
வரும் போகும்.
பிரதமர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் ஜனநாயக
கோட்பாடுகள், அரசியல் சட்டம் ஆகியவற்றின் மீது
கவனம் செலுத்துவது,
ஜனநாயகத்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஆகும். இது
20 கோடி மக்களின்
குரல். இது
எனக்கு மகிழ்ச்சி
அளிக்கிறது. இந்த நாள் என்றென்றும் நினைவில்
கொள்ளப்படும்.
இப்படி
ஒரு உதாரணத்தை
பாகிஸ்தான் வரலாற்றில் நான் கண்டதில்லை. 10 கட்சிகளில்
9 கட்சிகள் ஜனநாயகத்தை ஆதரித்து வாக்களித்தது, பாகிஸ்தானின்
வரலாற்று சிறப்பு
மிக்க தருணம்.
இந்த
சபையின் தலைவராக
என்னை தேர்ந்தெடுத்ததற்காக
உங்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். உங்கள் உணர்வுகளை
ஒருபோதும் காயப்படுத்தமாட்டேன்
என்று சபதம்
செய்கிறேன்.
நாம்
கடினமான நேரத்தை
எல்லாம் கடந்து
வந்திருக்கிறோம். 2008 ஆம் ஆண்டு
தேர்தலின்போது நமது கைகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் நாம் பிரசாரம் செய்தோம்.
பங்கெடுத்தோம். தேர்தல் மோசடி குறித்து ஒப்பாரி
வைக்கவில்லை. அப்போது அழுகுரல் எழுப்பி இருந்தால்
அது சட்டப்பூர்வமானதாக
இருந்திருக்கும். ஏனெனில் அப்போது பாகிஸ்தான் அரசு,
சர்வாதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஆனால்
எங்களை விட
பாகிஸ்தான் மக்கள் கட்சி கூடுதல் இடங்களை
கைப்பற்றினால், நாங்கள் அவர்களின் ஆட்சி உரிமையை
ஏற்போம் என்றுதான்
சொன்னோம். அதன்பின்னர்
5 ஆண்டுகள் அந்த அரசுடன் இணைந்து செயல்பட்டோம்.
இம்ரான்கான்,
காயம் அடைந்தபோது
மருத்துவமனைக்கு சென்று சந்தித்தேன். தேர்தலில் வெற்றி
பெற்றபோது வாழ்த்தினேன்.
அவர் ஆக்கப்பூர்வமான
எதிர்க்கட்சியின் பங்களிப்பை செய்வார் என்று கூறினேன்.
கடந்த
ஆண்டு நடந்த
தேர்தலின் முடிவை
இம்ரான்கான் ஏற்றுக்கொண்டார். பானிகலாவுக்கு
அவர் என்னை
அழைத்த போது
சென்று விவாதித்தேன்.
அவர் அரசுடன்
இருப்ப தாக
வாக்குறுதி வழங்கினார்.
இப்போது
தேர்தல் சீர்திருத்தங்கள்
தொடர்பாக கமிட்டி
அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும்
அமர்ந்து பேசுவோம்.
கருத்துக்களை கூறுவோம். தற்போதைய கடினமான சூழ்நிலை
கடந்து போகும்.
பாகிஸ்தான் வளத்தை நோக்கி பீடு நடை
போடும். இவ்வாறு
அவர் கூறினார்.
0 comments:
Post a Comment