காஸாவில் இஸ்ரேல் வான்வழித்
தாக்குதல் நடத்தியதில்
5 பாலஸ்தீனியர்கள்
பலி
காஸாவில்
47-வது நாளாக
தொடர்ந்து இஸ்ரேல்
தாக்குதல் தொடுத்து
வருகிறது. போர்
நிறுத்த ஒப்பந்தத்தை
மீறியதாக கூறி
மீண்டும் ஹமாஸ்
நிலைகள் மீது
வான்வழித் தாக்குதலை
இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இன்று
காலை காஸாவின்
மத்திய பகுதியில்
இஸ்ரேல் போர்விமானங்கள்
குண்டு மழை
பொழிந்ததில் அங்கு ஒரு வீட்டிலிருந்த 5 பேர்
கொண்ட பாலஸ்தீனிய
குடும்பம் பரிதாபமாக
பலியானது. அதில்,
3 குழந்தைகளும், அவர்களது பெற்றோரும் பலியாகினர்.
அண்மையில்,
சேனல் 2 தொலைக்காட்சியில்
ஒரு பேட்டியின்
போது இஸ்ரேல்
வெளியுறவு மந்திரி
அவிக்டோர் லைபெர்மேன்
ஹமாஸில் வெள்ளைக்
கொடி நாட்டப்படும்
வரை தாக்குதல்
நீடிக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இதுவரை
காஸாவில் இஸ்ரேல்
தாக்குதல் நடத்தியதில்
2098 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். 10,550-க்கும் மேற்பட்டோர்
படுகாயமடைந்துள்ளனர். அங்குள்ள 3 வரலாற்று
சிறப்புமிக்க மசூதிகளும் அழிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தரப்பிலிருந்து
68 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
2005-க்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளில்
மிக கொடூரமான
சண்டையாக இஸ்ரேல்-
பாலஸ்தீன சண்டை
கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment