பாகிஸ்தான்
பிரதமர் பதவி விலக
அவாமி தெஹ்ரிக் தலைவர்
காதிரி 24 மணி நேரம் கெடு
பாகிஸ்தானில் கடந்த
ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் நவாஸ்
ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப், அந்த
நாட்டின் பிரதமராக கடந்த
ஆண்டு ஜூன் மாதம்
பதவி ஏற்றார்.
இந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப், மதத்
தலைவர் தாஹிர் உல்
காதிரியின் பாகிஸ்தான் அவாமி
தெஹ்ரிக் ஆகிய இரு
கட்சிகளும் தோல்வியைத் தழுவின.
ஆனால் இப்போது அவ்விரு கட்சிகளும் கரம்
கோர்த்துக்கொண்டு, நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன. கடந்த
ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பெருமளவு ஊழலை அரங்கேற்றி நவாஸ்
ஷெரீப் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டதாக குற்றம் சாட்டி உள்ளன. இந்த
இரு கட்சிகளும் பிரதமர் நவாஸ் செரீபுக்கு எதிராக கடந்த 2 வாரமாக தலைநகர் இஸ்லாம்பாத்தில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு உள்ளன.
ஆனால் ஒரு
பக்கம் போராட்டகாரர்களுக்கும் அரசுக்கும் இடையே
பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவாமி தெஹ்ரிக் தலைவர் தாஹிர் உல் காதிரி பிரதமர் நவாஸ் செரீப் பதவி
விலக் 24 மணிநேர கெடு
விதித்து உள்ளார்.
நேற்று இரவு
காதிரி முகாமுக்கு இம்ரான் கான் கட்சியின் துணைத்தலைவர் ஷா மெஹ்மூத் குரேஷி வந்தார்.அவர் அவாமிக் தெரிக் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.கூட்டத்திற்கு பின்னர்குரேசி கட்சியினரிடையே உரையாற்றினார். அப்போது நடவடிக்கை ஒத்திவைப்பது குறித்து வலியுறுத்தினார். ஆனால்
இதற்கு போராட்டகாரர்கள் சம்மதிக்கவில்லை. காதிரி தனது ஆதரவாளர்களிடம் தங்களது திட்டத்திற்கு ஆதரவு
அளிக்குமாறு கேட்டு கொண்டார்.
0 comments:
Post a Comment