இன்று முற்றுகையை கைவிட வேண்டும்
பாகிஸ்தான்
உச்சநீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தானில்,
அதிபர் நவாஸ்
ஷெரீப் பதவி
விலக வலியுறுத்தி,
எதிர்க்கட்சி தலைவர் இம்ரான்கானும், மதபெரியார் காதிரியும்
சேர்ந்து பெரும்
போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதனால், தலைநகர்
இஸ்லாமாபாத் பெரும் பதற்றத்தில் உள்ளது. பாகிஸ்தானின்
நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அரசு
அலுவலகங்கள், இஸ்லாமாபாத்தின் அரசமைப்பு சாலை என்ற
பகுதியில் உள்ளன.
இந்நிலையில், இம்ரான்கான், தாகிருல் காதிரி ஆகியோர்
தலைமையிலான ஆயிரக்கணக்கானோர், கடந்த 12
நாட்களாக இந்த
சாலையை முற்றுகையிட்டுள்ளனர்.
இந்நிலையில், இம்ரான் கான், காதிரி ஆகியோரை
எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டது.
இது
தொடர்பாக உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதி
நசிருல் முல்க்
நேற்று அளித்த
உத்தரவில், “செவ்வாய்க்குள் அரசமைப்பு சாலை முற்றுகையை
போராட்டக்காரர்கள் கைவிட வேண்டும்
என்றார். “போராட்டக்காரர்கள்
தங்களது துணிகளை
காயவைத்து, தொங்கவிடும் இடமாக உச்சநீதிமன்றம் மாறிவிட்டது.Ó
என்று கூறி
நீதிபதி தனது
வேதனையை வெளிப்படுத்தினார்.
இந்த வழக்கு
நாளை மீண்டும்
விசாரணைக்கு வருகிறது.
0 comments:
Post a Comment