இஸ்ரேல்-ஹமாஸ்
போராளிகள்
சண்டை நிறுத்தம்?
காஸா
முனையை ஆளுகிற
ஹமாஸ் போராளிகளுக்கும்,
இஸ்ரேலுக்கும் இடையே கடந்த மாதம் 8 ஆம் திகதி
சண்டை
மூண்டது.
அவ்வப்போது சண்டை நிறுத்தமும்
கடைப்பிடிக்கப்பட்டது. இரு தரப்பினரும்
நிரந்தர சண்டை
நிறுத்தம் செய்வது
தொடர்பாக எகிப்து
தலைநகர் கெய்ரோவில்
நடந்த சமரச
பேச்சு கடந்த
19 ஆம் திகதி தோல்வி அடைந்தது. அதைத்
தொடர்ந்து இரு
தரப்பினரும் மீண்டும் தாக்குதல் நடத்தி வந்தனர்.
இந்த
நிலையில் எகிப்து
மத்தியஸ்தம் செய்ததின் பலனாக, இரு தரப்பினரும்
சண்டை நிறுத்தம்
செய்து கொள்ள
உடன்பட்டுள்ளதாக காஸாவில் ஹமாஸ் இயக்கத்தின் செய்தி
தொடர்பாளர் சமி அபு ஜூரி கூறியுள்ளார்.ஆனால்
இதுபற்றி இஸ்ரேல்
பிரதமர் பெஞ்சமின்
நேட்டன் யாஹ¨வின் செய்தி
தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார் என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment