மோடியுடனான சந்திப்பு

இலங்கைக்கு “ஐஸ்வாளி சவால்

கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றி

- தயான் ஜயதிலக்க



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து மோடி அரசு பேச்சு நடத்தியுள்ளமையானது கூட்டமைப்பினருக்குக் கிடைத்துள்ள இராஜதந்திர வெற்றியாகும் என்று அரசியல் விமர்சகரும் முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.   சீனப் பீதியால் இலங்கையை மோடி அழுத்தமாட்டார் என அரசு போட்ட கணக்கும் தற்போது பிழைத்துவிட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் மற்றும் அந்நாட்டு உயர்மட்ட பிரமுகர்களுடனான சந்திப்பு சம்பந்தமாக கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,  

தம்மை விட்டால் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு எவரும் இல்லை என்ற நினைப்பிலேயே அரசு இருந்துவந்தது. அத்துடன், சீனாவுடனான போட்டி காரணமாக “13 விவகாரத்தை பா.ஜ.க. அரசு கையிலெடுக்காது எனவும் அரசு எண்ணியது.    ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. அரசு போட்ட கணக்கு பிழைத்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், இலங்கைக்கு இது “ஐஸ்வாளி சவாலாகவும் கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றியாகவும் அமைந்துள்ளது. எனினும், இதனால் கூட்டமைப்பு திருப்தியடைந்துவிட முடியாது.   ஏனெனில், “13இற்கு அப்பால் என்ற பதத்தினூடாக மோடி அரசு எதை எதிர்பார்க்கின்றது? 13ஐ அடிப்படையாகக்கொண்டு தீர்வை மேலும் பலப்படுத்த வேண்டுமா அல்லது 13ஐ அடிப்படையாகக்கொண்டு மாற்றுத் தீர்வுப் பொறிமுறை வகுக்கப்படவேண்டுமா? இதில் மோடி அரசின் எதிர்பார்ப்பு எது என்ற வினாவுக்கத் தெளிவான பதில் இல்லை. ஆகவே, கூட்டமைப்புக்கும் இது “ஐஸ்வாளி சவாலாகும்.   அதேவேளை, இத்தகைய அழுத்தங்களிலிருந்து விடுபடவேண்டுமானால், இலங்கை அரசு பொலிஸ் அதிகாரத்தை விடுத்தாவது 13ஐ முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்வரவேண்டும். இது தொடர்பில் கூட்டமைப்புடன் பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top