பொதுபல சேனா தலையிட்டால்தான்
நீதி கிடைக்கும்
–
ஹஜ் முகவர்கள்
ஹஜ்
விவகாரத்தில் தலையிட்டு தங்களுக்கு ஒரு தீர்வினைப்
பெற்றுத் தருமாறு
பத்து பேர்
அடங்கிய ஹஜ்
முகவர் குழுவொன்று
பொதுபல சேனாவை
சந்தித்து கோரிக்கை
விடுத்தமை தொடர்பில்
மேலும் பல
தகவல்கள் தற்போது
வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
பொதுபல
சேனாவின் நிறைவேற்று
பணிப்பாளரான திலந்த விதானகே இது தொடர்பில்
தெரிவித்த விடயங்களில்
சிலவற்றை இங்கு
தருகிறேன். இந்த ஹஜ் முகவர்கள் எவ்வளவு
கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளனர் என்பதும் அவர்கள்
தங்களது வருமானத்துக்காக
இனத்தையும் மதத்தையும் எவ்வாறு பிஸ்னஸ் பண்ணியுள்ளார்கள்
என்பதனையும் இதன் மூலம் அறிந்து கொள்ள
முடிகிறது.
பொதுபல
சேனாவின் நிறைவேற்று
பணிப்பாளரான திலந்த விதானகே இவ்வாறு கூறுகிறார்...
ஹஜ்
விவகாரத்தில் தலையிட்டு தீர்வினைப் பெற்றுத் தருமாறு
அவர்கள் எம்மைக்
கோரினர்.
ஹஜ்
விவகாரம் ஒரு
மார்க்க விடயமாகும்
மதம் தொடர்பான
விடயத்தில் நாம் தலையிட முடியாது என்று
கூறினோம்.. அதற்கு அவர்கள் நாமே தலையிட
வேண்டும். நாம்
தலையிட்டாலே நீதி கிடைக்கும் என்றார்கள்.
ஹஜ்
விவகாரத்தில் அநீதி நிலவுவதாகவும் அரசியல் கலந்துள்ளதாகவும்
எமது அரசியல்
தலைவர்கள் மற்றும்
உலமா சபை,
உலமாக்களிடம் உதவி கோரியும் அவர்கள் மௌனமாக
இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். இதனையடுத்தே நாம்
அவர்களுக்கு உதவி செய்வதற்கு இணக்கம் தெரிவித்தோம்.
இதனையடுத்து
நாம் புத்தசாசனம்
மற்றும் மத
அலுவல்கள் அமைச்சிலிருந்து
ஹஜ் விவகாரம்
மற்றும் நடவடிக்கைள்,
நீதிமன்ற உத்தரவு
போன்ற விபரங்களைக்
கோரியுள்ளோம் என்று பொதுபல சேனாவின் நிறைவேற்று
பணிப்பாளருமான திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
இவற்றினை
எல்லாம் பார்க்கும்
போது கடந்த
காலங்களில் பொதுபல சேனா முன்னெடுத்திருந்த ஹலால் விடயம் தொடர்பில் தற்போது
சந்தேக எழுந்துள்ளது.
உள்நாட்டு வர்த்தகப்
போட்டி காரணமாக
இவ்வாறான முனாபிக்
தனம் கொண்ட
முஸ்லிம்களே ஹலால் விடயத்திலும் தலையிடக் கோரி
இருக்கவும் முடியுமல்லவா? இது போன்று வேறு
சில சம்பவங்களின்
பின்னணியிலும் இந்தக் காட்டிக் கொடுப்பு கூட்டம்
செயற்பட்டிருக்கவும் கூடும்.
பொதுபல
சேனாவை ஹஜ்
விவகாரத்தில் தலையிட வேண்டும். அவர்கள் தலையிட்டாலே
நீதி கிடைக்கும்
என்று அவர்கள்
கூறியுள்ளது எவ்வளவு கீழ்த்தரமான விடயம். அத்துடன்
இவர்கள் எமது
அரசியல் தலைவர்கள்
மற்றும் உலமா
சபை, உலமாக்கள்
அனைவரையும் இன்று தங்களது சுயநலத்துக்காக காட்டிக்
கொடுத்துள்ளனர்.
நன்றி:
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
(முகநூல்)
0 comments:
Post a Comment