புதிய
பாகிஸ்தான் அமைந்த பிறகே மீண்டும் திருமணம்
இம்ரான்கான் அறிவிப்பு!
புதிய பாகிஸ்தானை (நயா பாகிஸ்தான்) உருவாக்க வேண்டும்
என்ற கனவு உங்களுக்க மட்டுமல்ல எனக்கும் உள்ளது. உண்மையிலேயே புதிய பாகிஸ்தான் உருவாகும் போது நான் மீண்டும்
திருமணம் (மறுமணம்) செய்து கொள்வேன் இவ்வாறு
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான். இவருக்கு 62 வயது ஆகிறது. தற்போது இவரின் பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சி
எதிர்கட்சியாக உள்ளது.
பிரதமர் நவாஸ்செரீப் பதவி விலக கோரி இஸ்லாமாபாத்தில் பாராளுமன்றம் முன்பு கட்சி தொண்டர்களுடன் இம்ரான்கான் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பாராளுமன்றத்தின் முன்பு முகாமிட்டிருக்கும் ஆயிரக் கணக்கான கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது புதிய பாகிஸ்தானை (நயா பாகிஸ்தான்) உருவாக்க வேண்டும் என்ற கனவு உங்களுக்க மட்டுமல்ல எனக்கும் உள்ளது. உண்மையிலேயே புதிய பாகிஸ்தான் உருவாகும் போது நான் மீண்டும் திருமணம் (மறுமணம்) செய்து கொள்வேன் என்று கூறினார் . அதற்கு தொண்டர்கள் பலத்த கைதட்டலுடன் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இம்ரான் கான் இங்கிலாந்தை சேர்ந்த கோடீசுவரரின் மகள் ஜெமிமா கோல்டு ஸ்மித்துக்கும் கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சுலைமான், குவாசிம் என்ற 2 மகன்கள், உள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2004 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். 2 மகன்களும் தாயார் ஜெமீமாவுடன் இங்கிலாந்தில் உள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.