காஸா நகரம்
மீது இஸ்ரேல் விமான தாக்குதல்கள்
2 பேர் பலி 4 மசூதிகள் தரைமட்டம்
காஸா
முனையை ஆளுகிற
ஹமாஸ் போராளிகளுக்கும்,
இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி
சண்டை மூண்டது.
இந்த சண்டை
தீவிரம் அடைந்து
வருகிறது. அவ்வப்போது
இருதரப்புக்கும் இடையே சண்டை நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டது.
அந்த சண்டை
நிறுத்தத்தை மீறி இரு தரப்பினரும் தாக்குதல்
நடத்தி வருகின்றனர்.
இருப்பினும்
அவர்கள் இடையே
நிரந்தர சண்டை
நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான
மறைமுக சமரச
பேச்சை எகிப்து
முன்னின்று நடத்தியது. ஆனால் இந்தப் பேச்சு
வார்த்தை கடந்த
19ஆம் திகதி
தோல்வி அடைந்தது.
மீண்டும் சமரச
பேச்சை தொடங்குவதற்கான
அறிகுறி இல்லை.
காஸா
முனை பகுதியில்
இஸ்ரேல் தாக்குதலில்
இதுவரை 2135 பேர் பலியாகி உள்ளனர், 11 ஆயிரம்
பேர் காயம்
அடைந்து உள்ளனர்.
இஸ்ரேல் பக்கம்
64 இராணுவ
வீரர்கள் உட்பட
68 பேர் பலியாகி
உள்ளனர் என
அறிவிக்கப்படுகின்றது
இந்த
நிலையில் இஸ்ரேல்
விமானப்படை இன்று அதிகாலை காஸா நகரம் மீது விமானத்தாக்குதல்களை
நடத்தியது இதில்
2 பேர் பலியானார்கள்.
20க்கும் மேற்பட்டவர்கள்
படுகாயம் அடைந்தனர்.உயரமான குடியிருப்புகள்
மற்றும்
அலுவலக கட்டிடங்கள் இந்த தாக்குதலில்
தரைமட்டமாயின.
நேற்றைய விமான தாக்குதலில் 17 வயது வாலிபர் ஒருவர் பலியானார்.மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.விமான தாக்குதல்கள் மூலம் காஸா நகரில் உள்ள மசூதிகள் தாக்கபட்டன. நேற்று 4 மசூதிகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்த மசூதிகளில் இராணுவ நடவடிக்கை இருப்பதாகவும் ஆயுதகுழுக்கள் அங்கு இருப்பதாகவும் ஏற்கனவே இஸ்ரேல் குற்றம் சாட்டி உள்ளது.
காஸா எல்லை அருகே உள்ள இலக்குகளை நோக்கி 120 ராக்கெட்டுகள் வீசப்பட்டன என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் ஏற்பட முயற்சிகள் நடந்து வருகின்றன.இதில் ஐநா சபை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment