கொழும்பு புறக்கோட்டை பகுதியில்
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் வர்த்தக சந்தை
இன்று மக்கள் பாவனைக்கு
கொழும்பு
நகர நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ்
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் வர்த்தக
சந்தை இன்று மாலை
5.00 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து
வைக்கப்படவுள்ளது.
கொழும்பு நகரை அழுகுபடுத்தும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ்கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதியில் உல்லாசப் பயணிகளை கவரும் வகையில் இம்மிதக்கும் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இராணுவம் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த மிதக்கும் சந்தையில் 92 விற்பனைக் கூடங்களுடன் பூங்கா, பொழுது போக்கு இடம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் . நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்க்ஷவின் மேற்பார்வையில் நகர அபிவிருத்தி அதிகார சபை இந்த இந்த மிதக்கும் வர்த்தக சந்தைதொகுதியை நிர்மாணத்துள்ளது. குறித்த சந்தை தொகுதி கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்படவிருந்த நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு தினங்களுக்கு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment