ஆப்கானிஸ்தானில் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்,

3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்துள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
வடக்கு ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் சென்ற பஸ்ஸை குறிவைத்து தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல் நடத்தியுள்ளான் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணியளவில் டெக்தாதி மாவட்டத்தில் இத்தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவத்திற்கு எதிராக தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top