பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க
பாரியார் சகிதம் இந்தியாவுக்கு
பயணமானார்
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க இன்று தனது மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவுடன் கேரளாவில் உள்ள
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக இந்தியா பயணமானார்.
கொச்சி
விமான நிலையம் செல்லும் அவர்கள் அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீவால்சம் விருந்தினர் மாளிகைக்கு
செல்கிறார்கள். பின்னர் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு
இன்று மாலை 4.15 மணிக்கு கொச்சி விமானநிலையத்தில் இருந்து நாட்டுக்கு புறப்பட்டு வருகிறார்கள்.
தேர்தலுக்கு
முன்னதாக கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்த பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் இங்கு வருவேன் என்று நிருபர்களிடம்
அப்போது கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment