யோசித்த விவகாரம்
சுங்க பதிவில் ஆதாரம் இருப்பதாக கண்டுபிடிப்பு


சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்துக்குரிய 90 மில்லியன் ரூபா பெறுமதியான பஸ் வண்டி 40 மில்லியன் ரூபாவுக்கு போலியான பற்றுச் சீட்டு வழங்கப்பட்டு அதற்கான ஆதாரங்கள் சுங்க பிரிவில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது..
அது சி.எஸ்.என். தலைவர் யோசித்த ராஜபக்ஸவின் பெயரிலேயே கடந்த அரசாங்க காலத்தில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பஸ் வண்டிக்கான விலை மனுவும் சி.எஸ்.என். தலைவர் யோசித்த ராஜபக்ஸவின் பெயருக்கே கோரப்பட்டுள்ளது.

இந்த பஸ் வண்டி தொலைக்காட்சி சேவையை வழங்குவதற்கான உபகரணங்கள் பொருத்தப்பட்டவை எனவும், இது நாரஹேன்பிட்ட பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலையொன்றிலிருந்து கடந்த வாரம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top