முன்னாள்
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவை
சந்தித்தார் சுஷ்மா சுவராஜ்
இலங்கைக்கு
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா
சுவராஜ் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவையும் சந்தித்துப்பேசியுள்ளார்.
இந்திய
வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இரண்டு
நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைக்கு கடந்த
வெள்ளிக்கிழமை வருகை தந்திருந்தார்.
இலங்கை
– இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9வது மாநாட்டில் கலந்து கொள்வதாகற்காக இலங்கைக்கு
விஜயம் செய்த அவர், கொழும்பில் நடைபெற்ற குறித்த மாநாட்டில் கலந்து கொண்டதோடு, முக்கியத்துவம்
வாய்ந்த இரு ஒப்பந்தங்களையும் ஏற்படுத்திக் கொண்டார்.
முன்னதாக,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களையும் சுஷ்மா சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு
உறவுகள் குறித்து பேசப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment