சுஷ்மா சுவராஜ் யாழ். செல்லவில்லை!

வட மாகாண முதலமைச்சரையும் சந்திக்கவில்லை!!

இந்தியா திரும்பினார்!


இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த  இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் யாழ்ப்பாணம் சென்று அங்கு வடமாகாண முதல்வரைச் சந்திக்காமல் இந்தியாவிற்குப் திரும்பியுள்ளார்.
இன்று மாலை 4.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசேட விமானத்தின் மூலம் அவர் புதுடில்லி நோக்கி பயணமானார்.
இலங்கை – இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9வது மாநாட்டில் கலந்து கொள்வதாகற்காக நேற்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்த அவர், கொழும்பில் நடைபெற்ற குறித்த மாநாட்டில் கலந்து கொண்டதோடு, முக்கியத்துவம் வாய்ந்த இரு ஒப்பந்தங்களையும் ஏற்படுத்திக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சி பிரதிநிதிகளையும் அவர் சந்தித்ததுடன்.கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களையும் சந்தித்திருந்தார்.

இந்த விஜயத்தின் போது, அவர் யாழ்ப்பாணம் சென்று அங்கு வடமாகாண முதல்வரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் அவரது நிகழ்ச்சி நிரலில் அது இணைத்துக் கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top