கொஸ்கம சேதங்களை கண்டறிந்த பிரதமர்!


கொஸ்கம சலாவ இராணுவ ஆயுத கிடங்கு வெடித்ததில் சேதமடைந்த பிரதேசத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்த சம்பவம் காரணமாக 186 குடும்பங்களை சேர்ந்த 1,120 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
களுஅக்கல, மாவல்கம, முருத்தகம, அக்கரவிட்ட, பாஹலகொஸ்கம, பிரண்டிகம்பொல ஆகிய கிராம சேவகப் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதேசத்தில் தீ மற்றும் வெடிப்புச் சம்பவங்களில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் பிரதமர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்..

கொஸ்கம பிரதேச செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top