அப்பல்லோவில்
இருந்து போயஸ் கார்டன் சென்றது
ஜெயலலிதா உடல்
அப்பல்லோ மருத்துவமனையில்
இருந்து ஜெயலலிதாவின்
உடல் ஆம்புலன்ஸ்
மூலமாக போயஸ்
கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவமனையில் ஆயுதம்
தாங்கிய பொலிஸ்
வாகனங்கள் உடன்
சென்றது.
அவர்களுடன் அரசு
அதிகாரிகள் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் வாகனங்கள்
பின் சென்றன.
வழியின் இரு
புறங்களில் பொலிஸார் நீண்ட
வரிசையில் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சாலையின் இரு
புறங்களிலும் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு
இருந்தனர். கூட்டம் அதிகமாக உள்ளதால் அங்குள்ளவர்களை
பொலிஸார் கட்டுப்படுத்தி
வருகின்றனர்.
0 comments:
Post a Comment