இந்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறித்த கோப்புகள் வெளியிட்ட

டில்லி பல்கலைக்கழக அலுவலர்கள் 5 பேர் பதவி இடைநீக்கம்


இந்திய மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வி குறித்த கோப்புகளை முறைகேடான வகையில் வெளியில் பரவவிட்டதற்காக, டில்லி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பல்கலைக்கழகத்தின் திறந்த நிலைக் கல்விப் பிரிவைச் சேர்ந்த ஆசிரியரல்லாத பணியில் உள்ள நிர்வாக அலுவலர்கள் 5 பேர், இரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய கோப்புகளை ஊடகங்களில் வெளியிட்டதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன் துறைத் தலைவர் மலாய் நீரவ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top