கிழக்கு மாகாணத்தின் அடுத்த அரைக்கால

முதலமைச்சர் யார்? மன்சூரா? ஜெமீலா?

.எச்.சித்தீக் காரியப்பர்


கிழக்கு மாகாண சபையின் அடுத்த அரைக்காலப் பகுதிக்கான முதலமைச்சர் யார் என்று இப்போதிருந்தே கேள்விகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எம். மன்சூர் அல்லது கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் .எம். ஜெமீல் இவர்களில் யார் நியமிக்கப்படப் போகிறார் என்பது தொடர்பில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் நேற்று (30) அறிவிப்புச் செய்கிறார் என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது.
இருப்பினும் அப்படியான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த விடயம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமான எம்.ரீ.ஹஸன் அலி அவர்களுடன் தொடர்பு கொண்டு நான் கேட்ட போது அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அப்படி ஒன்றுமே இல்லை.. இந்த விவகாரம் தொடர்பில் இப்போதே கலந்தாலோசிக்கும் தேவை இல்லை. அடுத்த வருடம் பெப்ரவரி அல்லது மார்ச் மாதம் அளவில்தான் தற்போதைய முதலமைச்சரின் அரை காலப்பகுதி ஆட்சி முடிவடைகிறது. அப்போதுதான் இந்த விடயம் குறித்து ஆராயப்படும். இப்போது அவசரப்பட்டு ஆராய்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை
கேள்வி:- கிழக்கு மாகாணத்தின் அடுத்த அரைக் கால முதலமைச்சராக மன்சூரை அல்லது ஜெமீலைத் தெரிவு செய்து அந்த முடிவை அமைச்சர் ஹக்கீம் நேற்று அறிவிக்கவிருந்தாரென பரபரப்பாகப் பேசப்பட்டதே?
பதில்:- எல்லாம் பொய். இவைகள் ஒன்றிலும் எந்த உண்மை இல்லை என ஹஸன் அலி பதிலளித்தார்.


இது இவ்வாறிருக்க சுகாதார அமைச்சர் எம்.எம். மன்சூரையே அடுத்த அரைக் காலத்துக்கான கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்க வேண்டுமென்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெரும்பாலான முக்கியஸ்தர்களிடையே கருத்து ஒற்றுமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top