டில்லியில்
நவாஸ் ஷெரிப் பேட்டி:
நாடுகளுக்கிடையேயான வேறுபாடுகள் களைய
சிறந்த ஒரு வாய்ப்பு
நரேந்திர
மோடியின் பதவியேற்பு
விழாவில் கலந்து
கொள்வதற்காக இந்தியா சென்றுள்ள நவாஸ் ஷெரிப் தனியார்
தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
இதில் அவர்
கூறியிருப்பதாவது,
இரு
நாட்டு உறவினை
வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைவதற்கும்,
இந்தியா-பாகிஸ்தான்
இடையேயான எதிர்மறையான
அம்சங்களை போக்குவதற்கும்
இந்த பயணம்
ஒரு சிறந்த
வாய்ப்பாக அமையும்
என்று கருதவதாக
கூறியுள்ளார். மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க
டில்லி வந்துள்ள இந்த தருணம் சிறப்பு
மிக்கது என்றும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:-
மோடியின்
விழாவில் கலந்து
கொள்வது மிகப்பெரிய
வாய்ப்பு. கடந்த
1999 ஆம் ஆண்டில்
இந்திய பிரதமராக
இருந்த வாஜ்பாயும்,
நானும் எந்த
இடத்தில்விட்டமோ அதே இடத்தில் இருந்து மீண்டும்
இருநாட்டு உறவுகளையும்
தொடர விரும்புகிறேன். இருநாட்டு
அரசுகளும் வலுவான
நிலையில் உள்ளன.
மோடியை நான்
சந்திப்பதன் மூலம் நம்முடைய உறவில் ஒரு
புதிய பக்கத்தை
திருப்புவது போன்ற நிலை உருவாகும். முன்னாள்
பிரதமராக இருந்த
வாஜ்பாய் மீது
நான் பெரிதும்
மரியாதை கொண்டிருக்கிறேன்.
அப்போது அவரை
நான் சந்தித்தபோதும்
இதுதான் நடந்தது. நாம் நமககு (இந்தியா
- பாகிஸ்தான்) இடையே உள்ள அச்சத்தை அகற்ற
வேண்டும். இருநாடுகளுக்கும்
இடையே உள்ள
அவநம்பிக்கை மற்றும் தவறுகளை மறக்க வேண்டும்.
கடந்த பல
ஆண்டுகளாக இருநாடுகளுக்கும்
இடையே உள்ள
நிலையற்ற தன்மை
மற்றும் பாதுகாப்பு
அச்சுறுத்தல்களிலிருந்து விடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.