பாரத நாட்டின் மத்திய
அமைச்சர்களின்
வாழ்க்கை குறிப்பு
நரேந்திர மோடி:
* வைசியா
பிரிவின் உட்பிரிவான
‘மோத் கான்சி’
என்ற குஜராத்தில்
மட்டுமே உள்ள
மிகச்சிறிய பிரிவைச் சேர்ந்தவர் மோடி
* தாமோதர்தாஸ்
மூல்சந்த் மோடி
- ஹீராபென் தம்பதியின் 6 குழந்தைகளில்
3வது குழந்தை;
இந்தியில் ‘மோடி’ என்றால் ‘முத்து’
* ரயில்வே
ஸ்டேஷனில் தந்தை
மூல்சந்த் நடத்தி
வந்த டீக்கடையில் டீ சப்ளை செய்வது,
டம்ளர்களை கழுவி
வைப்பது மோடியின்
வேலை.
* மோடிக்கு
13 வயதிலேயே, ஜசோதா பென்னுடன் நிச்சயதார்த்தம்; 18 வயதில் திருமணம்.
* ஆர்எஸ்எஸ்சில்
தீவிரமாக இறங்க
வேண்டும் என்று
ஆசை; மனைவியை
விட்டு பிரிந்தார்.
அன்றிலிருந்து தனிக்கட்டை.
* டெல்லி
பல்கலைக் கழகத்தின்
தொலைதூர கல்வி
மூலம், அரசியல்
அறிவியலில் இளங்கலை பட்டம். குஜராத்
பல்கலைக்கழகத்தில் முதுகலை
பட்டம்.
* மோடியின்
வேகம், விவேகம்
, 1995 நவம்பரில், பாஜவின் தேசிய
செயலாளர் பதவியை
கொடுத்தது; அதனால் டெல்லிக்கே குடிபெயர்ந்தார்.
* 2001 அக்டோபர் 7ல் குஜராத் மாநில
முதல்வராக மோடி
நியமிக்கப்பட்டார். 2012ல் தன்னுடைய
3 அரசு காலத்தின்
சாதனைகளை கூறியே
நான்காவது முறை
வெற்றி பெற்றார்.
* கூட்டணி
அமைக்கும் விஷயத்திலும்
மோடி மிக,
மிக சாதுர்யமாக
செயல்பட்டார்; மோடி என்ற அரசியல் சுனாமி
அலையையே ஏற்படுத்தினார். மக்களவை
பிரசாரத்துக்கு நாடு முழுக்க 450 கூட்டங்களை நடத்தினார்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும்
தனி உடை,
நடை, பாணி.
அந்தந்த மாநில
பிரச்னைகள் பற்றியே பேச்சு. இவை தான்
வாக்காளர்களை கவர்ந்தது.
* 63 வயதான மோடி, தனியாக உட்கார்ந்து
சாப்பிடுவதில் அலாதி பிரியம். எப்போதும் சிந்தனை;
சித்து விளையாட்டு
போல எதையும்
மாற்றிக்காட்டுவதில் தனித்துவம்.
* 2002ல் கோத்ரா ரயில் எரிப்பு
சம்பவம் மூலம்
சர்ச்சைக்கு உள்ளானாலும், கோர்ட் மூலம் நிரபராதி
என்று விடுவிக்கப்பட்டவர்.
எனினும் அவர்
மீது சிறுபான்மையினருக்கும்
தனி ஆர்வம்...எதிர்பார்ப்பு இப்போது.
குஜராத்தை
சேர்ந்தவர் என்றாலும், 62 வயதான ஜெட்லி
டில்லியில் தான் அதிக வாசம். சுப்ரீம்
கோர்ட்டில் சீனியர் வக்கீல். சொலிசிட்டர் ஜெனரலில்
துவங்கி, வாஜ்பாய்
அரசில் சட்ட
அமைச்சராக இருந்தவர்.
2000 ல் இருந்து
மூன்றாவது முறை
ராஜ்யசபா எம்பியாக
தொடர்ந்தவர்; சமீபத்திய லோக்சபா தேர்தலில் பஞ்சாபில்
காங்கிரஸ் முன்னாள்
முதல்வர் அமரிந்தர்
சிங்கிடம் தோற்றார். எதிர்கட்சியாக
இருந்தபோது, நாடாளுமன்றத்திலும் வெளியேயும்
சட்டரீதியாக கருத்துக்களை வைத்தே தன்னை முன்னிறுத்தியவர்.
எதையும் ஆழமாக,
அழுத்தமாக வாதிக்க
கூடியவர்.
நஜ்மா ஹெப்துல்லா:
மோடி
அரசில்
சேர்க்கப்பட்ட ஒரே முஸ்லிம்
அமைச்சர்; சுதந்திர
போராட்ட தலைவர்
மவுலானா அப்துல்
கலாம் ஆசாத்தின்
குடும்பத்தை சேர்ந்தவர். கடந்த 86ல்
இருந்து 2012 வரை 5 முறை ராஜ்யசபா எம்பியாக
தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2 முறை
ராஜ்யசபா துணை
தலைவராக இருந்துள்ளார். 75 வயதானால்
அமைச்சராக முடியாது.
ஆனால் இவருக்கு
74 ஆகிறது. அதனால் இவருக்கு பதவி கிடைத்துள்ளது. நடிகர்
ஆமீர்கானின் உறவினர்.
சுஷ்மா சுவராஜ்:
அரியானாவை
சேர்ந்தவர் சுஷ்மா. 77 முதல் 90 வரை சட்டப்பேரவை
உறுப்பினர்; இரண்டு முறை அமைச்சராக
இருந்து, 90 ல் ராஜ்யசபா எம்பியானார். 1996, 2003 ல் வாஜ்பாய் அரசில்
அமைச்சராக இருந்தார்.
98ல் டில்லி முதல்வராகவும்
இருந்தார். ராஜ்யசபா எம்பியாக இருந்து இப்போது
நான்காவது முறையாக
இப்போது லோக்சபா
எம்பியாகி உள்ளார். லோக்சபாவில்
2009 ல் எதிர்கட்சி
தலைவராக இருந்தவர்;
காங்கிரசுக்கு சவாலாக திகழ்ந்தவர்; வாதங்களில் ஆணித்தரமாக எடுத்துரைப்பவர்.
நிதின் கட்கரி:
மகாராஷ்டிராவை
சேர்ந்த நிதின்
கட்கரி, 2009 ல் கட்சி பெரும் தோல்வியை
சந்தித்தபோது பாஜ தலைவரானார். மகாராஷ்டிர அரசில்
1995 &99ல் பொதுப்பணி துறை அமைச்சராக
இருந்து, பெரிய
அளவில் சாலைகள்,
பாலங்கள்
அமைத்தார். மும்பை & புனே
எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை இவரின் காலத்தில் போடப்பட்ட
திட்டம்.
மாநில அரசியலில் இருந்த இவர், 2009க்கு
பின் தான்
தேசிய
அரசியலில் பிரபலமானார். இப்போது நாக்பூர் தொகுதியில்
இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெங்கையா நாயுடு:
கடந்த
1973 ல் பாஜவில்
மாணவர் தலைவராக
நுழைந்தவர். பல்வேறு பொறுப்புகளை சுமந்து கடைசியில்
2003 ல் தேசிய
அளவில் கட்சி
தலைவராக இருந்தார்.
இரண்டு
முறை ராஜ்யசபா எம்பியாக இருந்தவர்.பிஏபிஎல்
படித்த இவர்
அடிப்படையில் விவசாயி.
சதானந்த கவுடா:
கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு
பின் 2011 ல்
முதல்வராக இருந்தவர்;
இப்போது மாநில
கட்சி துணை
தலைவராக இருந்தார்.
தொடர்ந்து இரு
முறை எம்எல்சியாக
இருந்தவர்; 2004 ல் மங்களூர் தொகுதியில் நின்று
லோக்சபா எம்பியானார். எடியூரப்பாவால்
ஊழல் குற்றச்சாட்டுக்கு
கட்சி ஆளான
போது, முதல்வராகி
கட்சி இமேஜை
காப்பாற்றினார்.
ஹர்ஷ் வர்தன்:
ஆர்எஸ்எஸ்சில்
தீவிரமானவர்; 59 வயதான இவர் 93ல் தான்
தீவிர அரசியலில்
நுழைந்தார். அமைதியான சுபாவம் உள்ளவர். விஜய்
கோயலுக்கு பின்
டில்லியின் கட்சி தலைவரானார். கடந் சட்டசபை
தேர்தலில் நான்கு
இடங்களை குறைவாக
பெற்றதால் ஆட்சியை
இழந்தார். எனினும்,
லோக்சபா தேர்தலில்
ஏழு லோக்சபா
இடங்களையும் பிடிக்க வைத்து சாதனை படைத்தார்.
4 முறை எம்எல்ஏவாக
இருந்தவர்; சாந்தினி சவுக் தொகுதியில் இந்த
முறை எம்பியாக
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரவிசங்கர் பிரசாத்:
பீகார் மாநிலத்தை சேர்ந்த
ரவிசங்கர், சட்டம் படித்தவர்; சுப்ரீம் கோர்ட்
வக்கீலாக இருந்தவர்;
தொடர்ந்து மூன்று
முறை ராஜ்யசபா
எம்பி. வாஜ்பாய்
அரசில் தகவல்
ஒளிபரப்பு அமைச்சராக
இருந்தவர். 2001 ல் நிலக்கரி துறை அமைச்சராக
இருந்தபோது, சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக சீர்திருத்தங்களை
கொண்டு வந்தவர்.
தகவல் ஒளிபரப்பு அமைச்சராக
இருந்தபோது ரேடியோ, டிவியில் புது தொழில்நுட்ப
முறைகளை அமல்படுத்தினார்.
வி.கே. சிங்:
ஓய்வு
பெற்ற போது
வயது பற்றி
சர்ச்சைக்கிடமான முன்னாள் ராணுவ தளபதி இவர்.
63 வயதான சிங்,
உபியில் காஜியாபாத்
தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நின்ற நடிகர்
ராஜ் பப்பரை
எதிர்த்து 5.67 லட்சம் ஒட்டு வித்தியாசத்தில் வென்றார். இவர் பிறந்த திகதி
1950 மே 10 என்றது அரசு; இவரோ 51 மே
10 ம் திகதி
என்று அரசையே கோர்ட்டுக்கு
இழுத்தார். ராணுவ லாரிகள் வாங்கியதில் 14 கோடி
ரூபாய் லஞ்சம்
வாங்கினார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது
இவர் தனிப்பொறுப்புடன்
கூடிய
இணை அமைச்சர்.
ராம்விலாஸ் பஸ்வான்:
கடந்த
2002 ல் குஜராத்
கலவரத்தின் போது தேஜ கூட்டணி அரசில்
இருந்து விலகியவர்.
அதன் பின்
இப்போது மோடி
அரசில் சேர்ந்துள்ளார்.
பீகாரில் இவரின்
லோக் ஜனசக்தி
கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததில் பாஜவுக்கு கூடுதல்
லாபம்.
1969 ல் அரசியல் ஆரம்பித்த பஸ்வான், 1977 ல்
முதன் முறையாக
லோக்சபா எம்பியானார்.
அப்போதே 4.24 லட்சம் ஓட்டு வித்தியாசம்
காட்டி கின்னஸ்
சாதனை படைத்தார்.2009ல் ஹாஜிபூரில்
தோற்றவுடன், 2010ல் லாலு பிரசாத்தின் கட்சி
ஆதரவோடு ராஜ்யசபா
எம்பியானார். இந்த
முறை ஹாஜிபூரில்
2.25 லட்சம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
பஸ்வான்.
கோபிநாத் முண்டே:
மகாராஷ்டிர
மாநிலத்தின் மூத்த பாஜ தலைவர் இவர்;
முதன் முறையாக
அமைச்சராகி உள்ளார். ஐந்து முறை எம்எல்ஏவாக
இருந்த இவர்
தேசிய வாத
காங் தலைவர் பவாரின்
கடுமையான பிரசாரத்தை
தாண்டி பீத்
தொகுதியில் வெற்றி பெற்றார். மாநிலத்தில் பவாருக்கு
கடும் போட்டியாக
இருப்பவர் முண்டே.
மறைந்த பாஜ
தலைவர் பிரமோத்
மகாஜனின் மைத்துனர்.
கல்ராஜ் மிஸ்ரா:
உபி
அரசியலில் பிரபலமானவர்;
71 வயதான
மிஸ்ரா, 1971 ல் ஜனசங்கம்
உறுப்பினராக சேர்ந்தார். 80ல் இருந்து தொடர்ந்து
மூன்று முறை
ராஜ்யசபா எம்பி.
ராதாமோகன்:
64 வயதான
இவர், ஜனசங்கத்தில்
ஆரம்பித்து இப்போது பாஜ வரை அமைதியாக
கட்சி பணியாற்றி
வருபவர். ஐந்து
முறை எம்பியாக
இருந்தாலும் இந்த முறை தான் மோடி
கண்ணில் பட்டு
அமைச்சராகி உள்ளார். பீகாரில்
2006க்கு பின்
கட்சியை வளர்த்தவர்.
ஆனந்த் கீதே:
சிவசேனாவை
சேர்ந்தவர்; கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயின்
நம்பிக்கையானவர். மோடி அமைச்சரவையில் யாருக்கு பதவி
அளிக்கலாம் என்றபோது உடனே இவரை தேர்ந்தெடுத்தார்
உத்தவ்.
கடந்த 1996ல் முதன் முறையாக எம்பியானார்.
வாஜ்பாய் அரசில்
கீதே, எரிசக்தி
அமைச்சராக இருந்தார்.
அனந்த குமார்:
கர்நாடகாவை
சேர்ந்த அனந்த
குமார், பெங்களூர்
தெற்கு தொகுதியில்
தொடர்ந்து 6 வது முறையாக எம்பியாகி உள்ளார்.
சாப்ட்வேர் புலி மற்றும் கடந்த அரசில்
ஆதார் கார்டு
திட்டத்தை உருவாக்கிய
நந்தன் நீலேகனியை
இவர் 2.28 லட்சம்
ஒட்டு வித்தியாசத்தில்
தோற்கடித்தார். அத்வானிக்கு
நெருக்கமானவர் என்று சொல்லப்பட்டாலும் சமீப காலமாக
மோடிக்கு நெருக்கமாக
பேசப்பட்டார். 55 வயதான இவர் ஒரு சட்ட
பட்டதாரி.
மேனகா காந்தி:
இந்திரா
காந்தி குடும்பத்தில்
இரண்டாவது மகன்
சஞ்சய் காந்தியின்
மனைவியாக இருந்து,
பின்னர் பாஜவில்
இணைந்தவர் மேனகா.
ஏழாவது
முறை லோக்சபா எம்பியாக இருந்து வருகிறார்.
இந்திரா காந்தியுடன்
சண்டை ஏற்பட்டதை
அடுத்து, வெளியேறி
தனிக்கட்சி ஆரம்பித்தார் 83ல். மறு ஆண்டே
நடந்த லோக்சபா
தேர்தலில் ராஜிவ்
காந்தியிடம் அமேதி தொகுதியில் தோற்றார்.
வாஜ்பாய் அமைச்சரவையில் 2004 ல் அமைச்சராக இருந்தவர்.
மகன் வருண்
காந்தியும் எம்பியாக இப்போது வெற்றி பெற்றுள்ளார்.
ஹர்சிம்ரத் கவுர்:
பஞ்சாபில்
அகாலி தள
தலைவர், முதல்வரான
பிரகாஷ் சிங்
பாதலின் மருமகள்.
படிண்டா லோக்சபா
தேர்தலில் தன்
கணவர் சுக்பீர்
சிங்கின் உறவினர்
மான்ப்ரீத் சிங்கை தோற்கடித்தார். 47 வயதான
கவுர், டிசைனிங்
படிப்பில் பட்டம்
பெற்றவர்.கடந்த
முறை எம்பியாக
இருந்தபோது, நாடாளுமன்றத்தில் 1984 சீக்கியர்
கலவரம் குறித்து
பேசி பரபரப்பை
ஏற்படுத்தினார்.
நரேந்திரசிங் தோமர்:
தொழிலதிபராக
இருந்து அரசியலுக்கு
வந்தவர். 1990ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு
செய்யப்பட்டார். 56 வயதான இவர்,
வாஜ்பாய் அரசில்
ஊரக மேம்பாட்டுத்துறை
அமைச்சராக பதவி
வகித்ததுடன், அதே காலக்கட்டத்தில் மத்திய பிரதேச
பாஜ தலைவராகவும்
இருந்துள்ளார். 2007ல் நாடாளுமன்ற
மேலவை உறுப்பினராகவும்
இருந்துள்ளார்.
ஜுல் ஓரம்:
இந்தியாவின்
முதல் பழங்குடியினர்
விவகாரத்துறை அமைச்சராக வாஜ்பாய் அமைச்சரவையில் பொறுப்பேற்றவர்.
ஒடிசா மாநிலம்
சுந்தர்கார் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தில் வறிய
குடும்பத்தில் பிறந்தவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பு
6 ஆண்டுகள் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை
பார்த்துள்ளார். ஒடிசாவில் பாஜ சார்பில் வெற்றி
பெற்ற ஒரே
வேட்பாளர். பிஜூ ஜனதாதளம் பெருவாரியான இடங்களில்
வெற்றி பெற்ற
நிலையில், பாஜவின்
நிலைப்பாட்டை இந்த மாநிலத்தில் காப்பாற்றியவர். விளையாட்டு
துறையில் அதிக
ஈடுபாடு கொண்டவர்.
அசோக் கஜபதி ராஜு:
விஜயநகரம்
பேரரசின் வழி
வந்தவர் ராஜு.
வயது 62. ஆந்திராவில்
ஏழு முறை
எம்எல்ஏவாக இருந்தவர். மோடி அரசில் மன்னர் பரம்பரையை
சேர்ந்த ஒரே
மந்திரி இவர்.
1982 ல் தெலுங்கு
தேசம் துவங்கியதில்
இருந்து தொடர்ந்து
கட்சி மாறாமல்
இருப்பவர். ராமராவ் அமைச்சரவையில் இருந்த இவர்,
அதன் பின்
சந்திரபாபு அரசிலும் நீடித்தார். மோடி அரசில் தெலுங்கு
தேச கட்சியின்
பிரதிநிதி இவர்.
தவார் சந்த் கெலாட்:
பாஜ
தேசிய பொது
செயலாளரான இவர்
தலித் சமுதாயத்தை
சேர்ந்தவர். ம.பி. சஜாபூர் தொகுதியில்
போட்டியிட்டு வென்றவர். இதற்கு முன்பு
தேவாஸ் தொகுதியில்
போட்டியிட்டு 1996 & 2009 வரை எம்.பியாக தேர்வு
செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டில்
இவர் மாநிலங்களவை
உறுப்பினரானார்.
ஸ்மிருதி இரானி:
பிரபல டிவி நடிகையாக இருந்து
பாஜவில் சேர்ந்து
சமீபத்தில் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்
காந்தியை எதிர்த்து
போட்டியிட்டு, ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி
அடைந்தார். இதற்கு
முன் சாந்தினி
சவுக்கில் கடந்த
தேர்தலில் காங்கிரசின்
கபில் சிபலை எதிர்த்து
தோற்றார்.
உமா பாரதி:
மிக
இளம் வயதிலேயே
கட்சி பணியில்
ஆர்வம் காட்டிய
இவர், வாஜ்பாய்
அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டு துறை,
சுற்றுலா, விளையாட்டு
அமைச்சர் உட்பட
பல்வேறு துறை
பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது 2 முறையாக மத்திய
அமைச்சராகியுள்ளார். ம.பி. முதல்வராகவும் இருந்துள்ளார்.
1989ல் கஜுராஹோ
தொகுதியில் முதல் முறையாக எம்.பியாக
தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து 3 முறை இந்த தொகுதியை தக்க
வைத்துக்கொண்டவர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.