ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின்
இந்திய வருகையை கண்டித்துஆர்ப்பாட்டம் :
டில்லியில் வைகோ கைது
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ இந்தியா வருகையை கண்டித்து டில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ கைது
செய்யப்பட்டார். ஜந்தர் மந்தரில் கறுப்புக் கோடி போராட்டம் நடத்திய ம.தி.மு.க தொண்டர்களும்
கைது செய்யப்பட்டனர். நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்பதற்கு ம.தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜந்தர் மந்தரில் வைகோ உள்பட 150 ம.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய
ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment