டிராய் சட்டத்தைத் திருத்தி
இந்தியப் பிரதமரின்
முதன்மை செயலாளராக
நிருபேந்திர மிஸ்ரா
நியமனம்
தொலைத்
தொடர்பு ஒழுங்குமுறை
ஆணையத்தின் (டிராய்) முன்னாள் தலைவரான நிருபேந்திர
மிஸ்ரா (69) பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச்
செயலராக புதன்கிழமை
நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அவசரச்
சட்டத்தை மத்திய
அரசு பிறப்பித்துள்ளது.
உத்தரப்
பிரதேச மாநிலத்தைச்
சேர்ந்த 1967ஆம் ஆண்டுப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான நிருபேந்திர
மிஸ்ராவின் பதவிக்காலம் பிரதமரின் பதவிக்காலம் முடியும்
வரையிலோ அல்லது
அடுத்த உத்தரவு
பிறப்பிக்கப்படும் வரையிலோ தொடரும்
என்று மத்திய
பணியாளர் நலன்
மற்றும் குறைதீர்ப்பு
அமைச்சகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிராய் அமைப்பின் தலைவர் பதவியில்
இருந்து 2009ஆம் ஆண்டு நிருபேந்திர மிஸ்ரா
ஓய்வு பெற்றார்.
டிராய் அமைப்பின்
தலைவர் பதவியில்
இருந்து ஓய்வு
பெற்றவர்கள் அதற்கு பின்பு மத்திய, மாநில
அரசு பதவிகளை
வகிக்கக் கூடாது
என்று டிராய்
சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த
விதிமுறையில் இருந்து நிருபேந்திர மிஸ்ராவுக்கு விதிவிலக்கு
அளித்து, பிரதமரின்
முதன்மைச் செயலராக
அவர் பதவி
ஏற்கும் வகையில்
மத்திய அரசு
அவசரச் சட்டம்
பிறப்பித்துள்ளது.
2ஜி
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நிருபேந்திர மிஸ்ரா
முக்கிய சாட்சிகளில்
ஒருவர் ஆவார்.
மன்மோகன்
சிங் தலைமையிலான
ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசில்
தயாநிதி மாறன்
தொலைத்தொடர்பு துறை மந்திரியாக இருந்த போது
நிருபேந்திர மிஸ்ரா தொலைத்தொடர்பு துறையின் செயலாளராக
இருந்தார். ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை
மந்திரியாக இருந்த போது, டிராய் தலைவராக
பதவி வகித்தார்.
0 comments:
Post a Comment