ஜெயிக்கப் போவது யார்?
இன்று நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில்
பஞ்சாப்–கொல்கத்தா பலப்பரீட்சை
இந்த
ஆண்டுக்கான ஐ.பி.எல். மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி பெங்களூர்
சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்–கொல்கத்தா
நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
7–வது
ஐ.பி.எல். 20 ஓவர்
கிரிக்கெட் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 16 ஆம் திகதி தொடக்கம் நடைபெற்று வருகிறது.
விறுவிறுப்பான இந்த போட்டி இறுதி கட்டத்தை
எட்டி விட்டது.
8 அணிகள் பங்கேற்ற
இந்த போட்டியில்
லீக் ஆட்டங்கள்
முடிவில் புள்ளி
பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த கிங்ஸ்
லெவன் பஞ்சாப்,
கொல்கத்தா நைட்
ரைடர்ஸ், சென்னை
சூப்பர் கிங்ஸ்,
மும்பை இந்தியன்ஸ்
ஆகிய 4 அணிகள்
இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு
முன்னேறின. ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ்
ஐதராபாத், பெங்களூர்
ராயல் சேலஞ்சர்ஸ்,
டெல்லி டேர்டெவில்ஸ்
அணிகள் லீக்
சுற்றுடன் வெளியேற்றப்பட்டன.
முதலாவது
தகுதி சுற்று
ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி
28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்
அணியை வீழ்த்தி
முதல் அணியாக
இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பையில்
நேற்று முன்தினம்
நடந்த இரண்டாவது
தகுதி சுற்று
வாய்ப்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி
24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இரண்டு முறை சாம்பியான
சென்னை சூப்பர்
கிங்ஸ் அணியை
சாய்த்து இறுதிப்போட்டிக்குள்
அடியெடுத்து வைத்தது.
கொல்கத்தா
அணி ஏற்கனவே
ஐ.பி.எல். கோப்பையை
2012–ம் ஆண்டில்
கைப்பற்றி இருக்கிறது.
2–வது முறையாக
ஐ.பி.எல். கோப்பையை
வெல்ல அந்த
அணி ஆர்வம்
காட்டும்.
கிங்ஸ்
லெவன் பஞ்சாப்
அணியை பொறுத்தமட்டில்
முதல் முறையாக
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று
இருக்கிறது. ஐ.பி.எல். கோப்பையை
உச்சி முகரும்
வேட்கையில் அந்த அணி முனைப்புடன் களம்
காணும்.
இன்றைய
போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:–
கொல்கத்தா:
கம்பீர் (கேப்டன்),
ராபின் உத்தப்பா,
மனிஷ் பாண்டே,
ஷகிப் அல்–ஹசன், யூசுப்
பதான், டென்
டஸ்சாட், சூர்யகுமார்
யாதவ், பியுஷ்சாவ்லா,
சுனில்நரின், மோர்னே மோர்கல், உமேஷ்யாதவ்.
பஞ்சாப்:
ஜார்ஜ் பெய்லி
(கேப்டன்), ஷேவாக், மனன்வோரா, மேக்ஸ்வெல், டேவிட்
மில்லர், விருத்திமான்
சஹா, ஜான்சன்,
அக்ஷர் பட்டேல்,
கரன்வீர்சிங், சந்தீப் ஷர்மா,பர்விந்தர் அவனா.
காத்திருக்கும் பரிசு மழை
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதல் பரிசாக ( இந்திய ரூபாவில்) ரூ.15கோடி,2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடி மற்றும் 3வது மற்றும் 4வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.7.5 கோடி என மொத்தம் 40 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ரூ.7.5 கோடியுடன் திருப்தியடைந்த நிலையில், முதல் பரிசை தட்டிச் செல்லப் போகும் அணி எது என்பது இன்று தெரிந்துவிடும்.
0 comments:
Post a Comment