இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
 நான் யாருடைய கட்டாயத்திற்காகவும் மாறவில்லை.
என்னுடைய முழு சம்மதத்தோடு மாறியுள்ளேன்.
-றஹீமா
நான் நடிகையாக இருப்பதால் வெளியில் செல்வதற்கு சிரமமாகஇருந்தது. அதனால் பர்தா அணிய ஆரம்பித்தேன். இது எனக்கு சவுகரியமாகவும் சுதந்திரமாகவும் இருந்தது. அதன்பிறகு பர்தா அணிவதால் இஸ்லாம் மதத்தை பற்றி தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டேன்.
 இஸ்லாம் மதத்தினகொள்கைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் யாருடைய கட்டாயத்திற்காகவும் மாறவில்லை. என்னுடைய முழு சம்மதத்தோடு மாறியுள்ளேன்.


தென்னிந்தியத்திரையுலக நடிகை மோனிகா இஸ்லாத்தைத் தழுவினார்
இன்று தென்னிந்தியத்திரையுலகை இஸ்லாம் ஆட்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்த விடயம். அந்த வகையில் நடிகை மோனிகா இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். தனது 2 1/2 வயது மழலைப் பருவம் முதல் இவ்வருடம் மே மாதம் வரை கிட்டத்தட்ட 22 வருடங்கள் பன்மொழியில் சினிமாவில் வலம் வந்த நடிகை மோனிகா தான் இஸ்லாத்தில் நுழைந்ததை வெளிப்படுத்தியுள்ளார்.
2010 ஆம் ஆண்டிலேயே தான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டதாகவும் அதனை பகிரங்கப்படுத்துவதற்கு முன்னால் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து அதற்கான சம்மதத்தை பெறவேண்டியிருந்ததாலும் தற்போதே உலகறியச் செய்வதற்கான தருணம் கிட்டியுள்ளதாகும் ஊடகச்சந்திப்பொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
"ஒரு முஸ்லிம் வாலிபரை காதலித்ததற்காகவோ அல்லது அரபு நாட்டு ஷேக் ஒருவரை திருமணமுடிப்பதற்காகவோ நான் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கவில்லை. அப்படியான அற்ப, நிர்ப்பந்த நோக்கங்களுக்காக நான் இவ்வாறானதொரு புனிதமிக்க செயலைத் தான் செய்யக்கூடியவளுமல்ல. இஸ்லாம் என்னை முழுமையாகக் கவர்ந்திருக்கிறது. இஸ்லாத்தின் ஒவ்வொரு சட்டங்களும் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் இஸ்லாத்தை சரியாகப்புரிந்து தெரிந்தே அதனை நான் தேர்வு செய்துள்ளேன்" என்றும் கூறியுள்ளார்.
அவர் இஸ்லாத்தை தேர்வு செய்தமைக்கான காரணத்தை விபரிக்கையில், "2007 ஆம் ஆண்டு எனது தந்தை இறந்த போது நான் எனது தேவைகளுக்காக வெளியில் தனிமையிலேயே செல்ல நேர்ந்தது. கடைத்தெருக்கள், சந்தைத்தொகுதிகள் என சனநெரிசலான இடங்களுக்கு சென்று வருவது நான் ஒரு நடிகை என்ற வகையில் மிகவும் அசௌகரியமாக இருந்தது. எனவே நான் புர்கா அணிந்து வெளியில் சென்றுவர ஆரம்பித்தேன். அது எனக்கு மிகவும் பாதுகாப்பாகவும் இனம்புரியாததொரு சந்தோசத்தை என்னுள் ஏற்படுத்தக்கூடியதாகவும் சென்ற வேலையை மிக எளிதில் முடித்து வருவதற்கு மிக உதவியாகவும் இருந்தது. நாள் செல்லச் செல்ல வேறு இடங்களுக்கு புர்கா இல்லாமல் செல்கையில் ஏதோ நமக்கு பிடித்தமானதொரு விடயத்தை இழந்துவிட்டோம் என்று உள்ளுணர்வு என்னை உறுத்த ஆரம்பித்தது. இதுவே இஸ்லாத்தைப்பற்றி கற்க வேண்டும் என்ற ஆசையைத் முதன் முதலில் எனக்குத் தூண்டியது" என்றார்.
அதற்கு முன் எல்லோரையும் போன்று இஸ்லாம் தீவிரவாதத்தைப்போதிக்கும் ஒரு மதம் என்றே கருத்துக்கொண்டிருந்ததாகவும், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் தான் இருக்கவில்லை என்றும் கூறிய அவர், புர்காவை அணிந்ததே தனக்கு இவ்வளவு மனநிம்மதியை தருகிறதென்றால் அதிலுள்ள மற்றைய விடயங்களையும் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஆர்வம் பிறந்ததாதவும் தெரிவித்தார்.
இஸ்லாம் அவ்வாறான தவறான சிந்தனைப்போக்கை விட்டும் முற்றிலும் மாறுபட்ட ஒரு புனித மார்க்கம் என பலரிடம் இஸ்லாம் பற்றிக் கேட்டுத்தெரிந்த பின் புரிந்து கொண்டதாகவும் தெரிவித்த அவர், அதன் பின்னர் தனக்கு பல இஸ்லாமிய நண்பர்கள் கிடைத்ததாகவும் என்னைச்சுற்றிப் பலரும் ஒரு காரணத்தோடு பழகும் போது அவர்களில் சிலர் மிகவும் மாறுபட்ட நிலையில் தன்னுடன் பழகியதாகவும் தமது வாழ்க்கையை தம்மை விட மிகவும் வித்தியாசமாக வாழ்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டு எவ்வாறு இவர்களுக்கு இவ்வாறு தமது வாழ்க்கையை வாழ முடிகிறது எனக்கேட்ட போது, இஸ்லாம் எல்லோரையும் இவ்வாறு தான் வாழப்பணித்திருக்கிறது. ஆனால் பலர் இவ்வாறு தமது வாழ்க்கையை இஸ்லாம் கூறிய பிரகாரம் வாழ்வதில்லை, அவ்வாறு வாழும் சிலரே நீங்கள் கண்டு ஆச்சரியப்பட்டவர்கள் என்ற பதில் கிடைத்த போது இஸ்லாத்தை நன்கு கற்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்ததாகவும் அவர் தனக்கு நிகழ்ந்த சுவாரஸ்யமான விடயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தற்போது புனித இஸ்லாத்தை ஏற்றுள்ள அவர், தனது சென்ற வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும் போது, தான் எந்தத் தப்பும் செய்யாமல் ஒழுக்கமாக சினிமாத்துறையில் சம்பாதித்தே முன்னேறியதாகவும் அதனை நினைத்துப்பார்க்கும் போது தனக்கு மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறு இருந்தபோதிலும் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்ற தூய ஏகத்துவக் கலிமா ஒருவரின் இஸ்லாத்திற்கு முன்புள்ள எந்தப்பாவத்தையும் அழிக்காமல் விட்டுவைக்கக்கூடியதல்ல என்ற வகையில் இவர் பாவங்களனைத்தும் மன்னிக்கப்பட்டு இஸ்லாத்திற்கேற்ற வேறொரு துறையை தேர்வு செய்து இனிமேல் M.G. ரஹீமாவாக புனித இஸ்லாத்தில் வலம் வரவிருக்கின்றார்.

அல்லாஹ் இவரது வாழ்க்கையை ஒளிமயமாக்கி, ஏனைய சினிமாத்துறைசார் நடிக நடிகைகளுக்கும் இவரை இஸ்லாத்தின் நுழைவாயிலாக்குவானாக.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top