இறுதிப்
போட்டிக்கு முன்னேற போகும் முதல் அணி எது?
கிங்ஸ் லெவன் - நைட் ரைடர்ஸ்
இன்று மோதல்
ஐபிஎல்
டி20 தொடரின்
7வது சீசனில்,
இறுதிப் போட்டிக்கு
முன்னேற போகும்
முதல் அணி
எது என்பதை
தீர்மானிக்கும் ‘குவாலிபயர் 1’ ஆட்டத்தில், கிங்ஸ் லெவன்
பஞ்சாப் - கொல்கத்தா
நைட் ரைடர்ஸ்
அணிகள் இன்று
மோதுகின்றன.
கிரிக்கெட்
ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற இந்தியன்
பிரிமியர் லீக்
20 ஓவர் போட்டி
தொடர், கடந்த
மாதம் 16ஆம்
திகதி தொடங்கி
நடந்து வருகிறது.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் காரணமாக
முதல் 20 லீக்
ஆட்டங்கள் ஐக்கிய
அரபு நாடுகளில்
நடைபெற்றன. இதையடுத்து, மே 2ஆம் திகதி
முதல் இரண்டாம்
கட்ட லீக்
ஆட்டங்கள் இந்திய
மைதானங்களில் நடத்தப்பட்டன. எட்டு அணிகளும் தங்களுக்குள்
தலா 2 முறை
மோதிய நிலையில்,
புள்ளி பட்டியலில்
முதல் 4 இடங்களைப்
பிடித்த அணிகள்
பிளே ஆப்
சுற்றுக்கு முன்னேறி உள்ளன. பஞ்சாப் அணி
அதிகபட்சமாக 11 வெற்றிகளுடன் 22 புள்ளிகள் பெற்று முதலிடம்
பிடித்தது. கொல்கத்தா, சென்னை அணிகள் தலா
9 வெற்றியுடன் 18 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தாலும்
ரன்ரேட் அடிப்படையில்
கொல்கத்தா 2வது இடத்தை கைப்பற்றியது. நான்காவது
இடம் யாருக்கு
என்பதை தீர்மானிப்பதற்கான
கடைசி லீக்
ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்
அணி ராஜஸ்தான்
ராயல்ஸ் அணியை
வீழ்த்தி பிளே
ஆப் சுற்று
வாய்ப்பை தட்டிப்
பறித்தது. வெற்றி
இலக்கான 190 ஓட்டங்களை அந்த அணி 14.3 ஓவரிலேயே
எட்ட வேண்டும்
என்ற மிகக்
கடினமான சவாலை
எதிர்கொண்ட நிலையில், மும்பை 14.4 ஓவரில்
195 ஓட்டங்கள் எடுத்து ஓட்ட வீத அடிப்படையில்
ராயல்சை பின்னுக்குத்
தள்ளியது.
அந்த
அணியின் கோரி
ஆண்டர்சன் 44 பந்தில் 95* ஓட்டங்கள் எடுத்து (9
பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்ட நாயகன் விருது
பெற்றார். ஐதராபாத்
(12), பெங்களூர் (10) அணிகள் முறையே
6வது மற்றும்
7வது இடத்தை
பிடித்த நிலையில்,
கெவின் பீட்டர்சன்
தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 புள்ளிகள்
மட்டுமே பெற்று
(2 வெற்றி, 12 தோல்வி) பரிதாபமாக கடைசி இடத்தை
பிடித்தது. இந்த நிலையில், பிளே ஆப்
சுற்று இன்று
தொடங்குகிறது. கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில்
இரவு 8.00 மணிக்கு
தொடங்கும் குவாலிபயர்
1 ஆட்டத்தில், ஜார்ஜ் பெய்லி தலைமையிலான கிங்ஸ்
லெவன் பஞ்சாப்
அணியுடன் கவுதம்
கம்பீர் தலைமையிலான
கொல்கத்தா நைட்
ரைடர்ஸ் அணி
மோதுகிறது.
இந்த
போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக
இறுதிப் போட்டிக்கு
முன்னேறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு
அளிக்கப்படுகிறது. குவாலிபயர் 2 எனப்படும்
இந்த ஆட்டத்தில்
3வது, 4வது
இடங்களைப் பிடித்த
சென்னை - மும்பை
அணிகளிடையே நடக்கும் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் வெற்றி
பெறும் அணியுடன்
குவாலிபயர் 1ல் தோற்ற அணி மோதும்.
அதில் வெற்றி
பெறும் அணி
பைனலுக்கு தகுதி
பெறும். பஞ்சாப்
- கொல்கத்தா இரு அணிகளிலுமே அதிரடி ஆட்டக்காரர்கள்
அதிகமுள்ளதால், குவாலிபயர் 1 ஆட்டம் ரசிகர்களிடையே மிகுந்த
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல்
போட்டியின் இறுதிச்சுற்றுக்கான முதல் அரையிறுதி தகுதிச்சுற்று
ஆட்டம் சற்று
முன்பு
கொல்கத்தாவில் தொடங்கியது இந்த
போட்டியில் கொல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
சற்றுமுன்பு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ்
வென்ற பஞ்சாப்
அணி பந்துவீச்சை
தேர்வு செய்துள்ளது.
Kings XI Punjab |
Kolkata Knight Riders |
0 comments:
Post a Comment