எலிமினேட்டர் சுற்றில்
மும்பையை வீழ்த்தியது சென்னை
ஐ.பி.எல்.
சீசன் 7 எலிமினேட்டர்
சுற்றில் மும்பைக்கு
எதிரான ஆட்டத்தில்
சென்னை சூப்பர்
கிங்ஸ் அணி
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக
டாஸ் வென்ற
சென்னை அணி
முதலில் பந்து
வீச்சை தேர்வு
செய்தது. இதனை
அடுத்து களமிறங்கிய
மும்பை அணி
நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை
இழந்து 173 ஓட்டங்கள் எடுத்தது. மும்பை அணியில்
அதிகபட்சமாக சிம்மொன்ஸ் 44 பந்துகளில் 5
பவுண்டரி, 4 சிக்சர், உள்பட 67 ஓட்டங்கள் எடுத்து
ஆட்டமிழந்தார். மைக்கேல் ஹஸ்ஸி 39, கோரி ஆண்டர்சன்
20, ரோகித்சர்மா 20 ஓட்டங்கள் எடுத்து
ஆட்டமிழந்தனர்.
சென்னை
அணியின் பந்து
வீச்சில் மோகித்சர்மா
3, ஜடேஜா 2, நெக்ரா 2, அஸ்வின் 1, விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனை அடுத்து
174 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
களமிறங்கிய சென்னை அணி 18.4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை
இழந்து 176 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை
அணியில் அதிகபட்சமாக
ரெய்னா 32பந்துகளில்
பவுண்டரி சிக்சர்
உள்பட54 ஓட்டங்கள் எடுத்து எடுத்து இறுதிவரை
ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதிசெய்தார். வேய்ன் ஸ்மித்
20, டு ப்ளஸ்சிஸ்
35, மெக்கல்லம் 14 ஓட்டங்கள் எடுத்து
ஆட்மிழந்தனர். இந்த வெற்றியின் மூலம் குவாலிபையர்
2-வில் பஞ்சாப்
- சென்னை அணிகள்
வரும் 30-ஆம்
திகதி விளையாட
உள்ளன.
0 comments:
Post a Comment