எகிப்து அதிபர் தேர்தலில்
அப்தெல் சிசி அபார வெற்றி
96 சதவீத வாக்குகள் பெற்றார்
எகிப்தில் நடைபெற்ற அதிபருக்கான தேர்தலில் முன்னாள் இராணுவத் தலைமை தளபதி அப்துல் ஃபட்டா அல்-சிசி
96.2 சதவீத
வகுகளைப்
பெற்று முன்னிலையில் உள்ளார்.
முன்னாள் அதிபரான முகமது மோர்ஸியை பதவி
நீக்கம் செய்து, அவரது
இஸ்லாம்
சகோதரத்துவ
கட்சியையும் ஒடுக்கிவிட்டு, கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தவர் 59
வயதுடைய அப்துல் ஃபட்டா
அல்-சிசி .
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் மூன்று
நாள்களுக்கு அந்த நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் மொத்தம் பதிவான
2 கோடியே
10 லட்சம் வாக்குகளில்
96.2 சதவீத
வாக்குகளை அப்துல் ஃபட்டா பெற்று முன்னிலையில் உள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஒரே வேட்பாளரான ஹம்தீன் சப்பாய்
3.8 சதவீத
வாக்குகளை பெற்றுள்ளார்.
இதுவரை 352 வாக்குப் பெட்டிகளில் 312 பெட்டிகளில் இருந்த வாக்குகள் மட்டும் எண்ணப்பட்ட நிலையில்,
தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகின்றது.
தற்போது நடந்து முடிந்த
தேர்தலில் மொத்தம் 44.4 சதவீத வாக்குகள் பதிவாகி
இருந்தன. இது 2012இல் 57 சதவீதமாக இருந்தது.
அப்போது, எகிப்தில் முதன் முறையாக அதிபருக்கான தேர்தல் ஜனநாயக
முறையில் நடைபெற்றது. அந்த தேர்தலில் மோர்ஸி வெற்றி பெற்றிருந்தார்.
எகிப்து அதிபர் தேர்தலில் அப்துல் ஃபட்டா அல்-சிசி முன்னிலை பெற்றுள்ளதை வியாழக்கிழமையன்று கொண்டாடும் அவரது ஆதரவாளர். |
0 comments:
Post a Comment