உலகின் குண்டு மனிதர் "மேனுவல் மெமெ உரைப்"பின் உடல்

லாரியில் கொண்டு செல்லப்பட்டு மின்தகனம்

கடந்த 2006-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தத்தால் உலகின் அதிக எடையுள்ள குண்டு மனிதர் என்று சான்றுரைக்கப்பட்ட மெக்சிகோவின் மேனுவல் மெமெ உரைப், தனது 48 வயதில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
மெக்சிகோவில் உள்ள மாண்ட்டெர்ரி நகரில் மேனுவல் மெமெ உரைப் என்ற சிறுவன் பிறக்குபோது அதிக எடையுடன் இருந்தார். பின்னர் வளர வளர அதிக எடையுடன் (சுமார் 250 பவுண்டு) காணப்பட்ட மேனுவல், தன்னை போன்ற ஒத்த வயதுடைய சிறுவர்களைவிட மிக அதிக எடையுடன் இருந்தார். வாலிப வயதை அடைந்த போது மேனுவலின் எடை 280 பவுண்டாக அதிகரித்தது.
இந்நிலையில் மேனுவல்  கடந்த 2006 ஆண்டு உலகின் மிக அதிக எடையுள்ள குண்டான மனிதர் என்று உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்அப்போது அவரது எடை 560 கிலேவாக இருந்தது.
இதன் பின்னர் 2008 ஆண்டு, தனது 42 வயது வயதில், 38 வயதான கிளாடியா சாலிஸ் என்ற பெண்ணை  திருமணம் செய்து கொண்டார். கடந்த 6 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே வசித்துவந்த அவருக்கு ஈரல் மற்றும் இதயம் சார்ந்த பாதிப்பு இருந்துள்ளது. மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று சாப்பிடுவதை பாதியாக குறைத்து  உடல் எடையை 394 கிலோவாக குறைத்துள்ளார்.
இந்நிலையில்  மேனுவல் மெமெ உரைப் கடந்த திங்கள்கிழமை இதயத்தில் ஏற்பட்ட கோளாறால் மரணம் அடைந்தார்.

இதனை தொடர்ந்து மேனுவலின் உடைலை ஒரு பெரிய பெட்டியில் அடைத்து லாரியில் ஏற்றி சென்ற அவரது உறவினர்கள், மாண்ட்டெர்ரியில் உள்ள மின்தகன சுடுகாட்டில் தகனம் செய்ய கொண்டு சென்றனர்,

அங்கு மின் தகன மேடையின் கதவுகளை மேனுவலின் உடல் முழுமையாக நுழையும் அளவுக்கு திறந்த பின்னரே தகனம் செய்ய முடிந்தது தங்கள் பகுதியில் வசித்துவந்த உலகின் குண்டு மனிதரின் மரணம் மாண்ட்டெர்ரி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top