உத்தரபிரதேசத்தில் ரயில் விபத்து
பலி எண்ணிக்கை
25ஆக உயர்ந்துள்ளது
அரியானா
மாநிலம் சாரில்
இருந்து டெல்லி
வழியாக உத்தரபிரதேச
மாநிலம் கோரக்பூர்
நகருக்கு கோரக்தாம்
அதிவேக எக்ஸ்பிரஸ்
ரயில் நேற்று
காலை உ.பி. மாநிலம்
சாந்த் கபீர்
நகர் மாவட்டம்
கலாலியாபாத் அருகே வேகமாக சென்று கொண்டிந்த
போது, எதிரே
வந்த சரக்கு
ரயில் மீது
மோதி விபத்துக்குள்ளானதில்
25 பேர் பலியாயினர்.
100-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன்
கோரக்பூர், கோண்டா நகர மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டனர். அங்கு மேலும்
பலரது நிலைமை
கவலைக்கிடமாக உள்ளது. முதலில் 42 பேர் பலியானதாக
தகவல் வெளியானது.
பின்னர் 11 பேர் மட்டுமே இறந்ததாக ரெயில்வே
நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில்
பலி எண்ணிக்கை
தற்போது 25 ஆக அதிகரித்துள்ளது.
0 comments:
Post a Comment