காரைதீவு முச்சந்தித் தைக்கா (சியாரம்) அமைவிடம்
காரைதீவு
முச்சந்தித் தைக்கா (சியாரம்)இலங்கையின் கிழக்கு
மாகாணத்தில் மட்டக்களப்பு பொத்துவில் பிரதான வீதியில்
கல்முனையிலிருந்து 04 கிலோ மீட்டர்
தொலைவில் காரைதீவு
முச்சந்திக்கு அருகாமையில் மேற்குப்புறமாக
அமைந்துள்ளது. இது அமைந்துள்ள காணியின் தற்கால
(21.05.1984) விஸ்தீரணம்: 1ஏக்கர் 28.3 பேர்ச்
(1றூட் 08..5 பேர்ச் மேட்டு நிலம் 3 றூட்
19.8 பேர்ச் வயல்)
இச்சந்தியின்
மேற்குப்புறமாகப் பிரிந்து செல்லும் பாதை சம்மாந்துறையூடாக
அம்பாறை நோக்கிச்
செல்கின்றது. இப்பாதை அமைக்கு முன்னரேயே இத்தைக்கா
இங்கு அமைந்திருந்த
காரணத்தினால் இச்சந்தி தைக்கா சந்தி என்று
அழைக்கப்பட்டு வந்தது.
19ம்
நூற்றாண்டுக்கு முன்னர் இத்தைக்கா அமைந்துள்ள பிரதேசம்
பாவட்டந்தீவு என அழைக்கப்பட்டு வந்துள்ளது. தற்போதைய
பிரதான பாதையுட்பட
ஏனைய பாதைகள்
அமைக்கப்படுவதற்கு முன்னர் இப்பிரதேசம்
நீர் நிலைகளால்
சூழப்பட்ட தீவாகக்
காட்சியளித்தது. பாவட்டந்தீவின் கிழக்குப்புறமாக
காரைதீவும் வடக்கே சாய்ந்தமருதும் தெற்கே நிந்தவூரும்
மேற்கே மாவடிப்பள்ளியும்;
காணப்பட்டது.
இப்பிரதேசத்தின்
அயற் கிராமங்களான
காரைதீவு, சாய்ந்தமருது,
மாவடிப்பள்ளி கிராமங்களில் இருந்தும் இக்கிராமங்கள் ஊடாகவும்
வயல் நிலங்களுக்கு
செல்வோர் பாவட்டந்தீவை
ஊடறுத்தும் அங்கு தங்கியும் செல்வது வழக்கமாக
இருந்தது.இப்பிரதேசத்தில்
போக்குவரத்து நீர் நிலைகளை அண்டிய நடை
பாதைகளாலும் நீர் வழியாகவுமே மேற்கொள்ளப்பட்டது.
அக்காலத்தில்
கப்பல்கள் தற்போதைய
மட்டக்களப்பு, கல்லாறு வாவியூடாக வந்து முன்னர்
மட்டக்களப்பு என அழைக்கப்பட்ட சம்மாந்துறைக்கும் சாய்ந்தமருதுக்கும் இடைப்பட்ட
பகுதியில் பாவட்டந்தீவுக்கருகாமையிலேயே
நங்கூரமிட்டுள்ளன. டச்சுத் தூதுவர்
ஸ்பில் பேகனும்
1602 இல் இங்கேயே
தரையிறங்கி கண்டி மன்னனைச் சந்திக்கச் சென்றுள்ளான்
என கொழும்பு
டச்சு நூதன
சாலையில் உள்ள
படமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதமே
இந்தியாவில் இருந்து வந்த பெரியார்களும் இங்கு
தரையிறங்கி அண்மையிலுள்ள பிரதேசங்களில்
வாழ்ந்துள்ளனர்.
ஆங்கிலேயே
ஆட்சியில் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்பிரதேசத்தில்
உள்ள பிரதான
பாதைகள் போடப்பட்டதன்
பின்னரே காரைதீவுக்கும்
பாவட்டந் தீவுக்கும்
நிலத் தொடர்பு
ஏற்பட்டது. அத்துடன் 1930ஆம் ஆண்டின் பின்னர்
கிராம சபை
ஆட்சி முறை
ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாவட்டந்தீவு
காரைதீவுடன் இணைக்கப்பட்டது.
ஆயினும்
1987ஆம் ஆண்டில்
பாவட்டந்தீவு உட்பட குடாக்கரைப் பிரதேசம் அனைத்தும்
கல்முனை பிரதேச
சபைக்கும் 1998 இல் கல்முனை நகர சபைக்கும்
2001 இல் கல்முனை
மாநகர சபைக்கும்;;
உட்பட்ட பிரதேசமாக
அரச வர்த்தமானிகளில்
பிரசுரிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்
பெரியார்கள் வருகை
கிழக்கு
மாகாணத்தில் முஸ்லிம்கள் 8ம் நூற்றாண்டிலிருந்தே வாழ்ந்ததாக வித்துவான் பண்டிதர் வி;.சி;. கந்தையா
‘மட்டக்களப்பு தமிழகம்’எனும் தனது நூலில்
குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்குப்
பகுதியிலிருந்தும் தென் இந்தியாவிலிருந்தும்
பல இஸ்லாமியப்
பெரியார்கள் 8ம் நூற்றாண்டின் பின்னர் இப்பகுதிக்கு
விஜயம் செய்துள்ளனர்.
இவர்கள்
இஸ்லாமிய சமயப்
பணிக்காகவும், ஆதம் மலையை தரிசிக்கவும் மற்றும்
வியாபார நோக்குடனும்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டனர். இலங்கையில் இஸ்லாமியப்
பண்பாடுகளை வளர்க்கவும் பலபள்ளிவாசல்களின்
தோற்றத்திற்கும் இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.
இவர்களில் சிலர்
இங்கேயே தங்கி
அரும் பணியாற்றி
மரணித்துள்ளார்கள்.
கி.பி. 942 இல்
இந்தியாவிலிருந்து ஆதம் மலையை
தரிசிக்க வந்த
பெரியார் இமாம்
அபூ அப்துல்லா
என்பவர் இப்பிரதேசத்தில்
வாழ்ந்து மரணித்ததாகவும்,
அவருடைய சமாதியை
பிரபல தேச
சஞ்சாரி இப்னு
பதூதா தரிசித்ததாகவும்
மணிப்புலவர் மருதூர் ஏ மஜீட் தனது
‘மத்தியகிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை’
எனும் நூலில்
குறிப்பிட்டுள்ளார். இமாம் அபூ
அப்துல்லா அவர்கள்
அடக்கம் செய்யப்பட்ட
இடம் பாவட்டந்தீவு
எனவும் அவரால்
இங்கு ஆரம்பிக்கப்பட்ட
தைக்கா பின்னர்
குடாக்கரைத் தைக்கா எனவும் அபூ அப்துல்லாசியாரம்
எனவும் அழைக்கப்பட்டதாகவும்
கலாபூசணம் காசீம்
ஜீ குறிப்பிடுகிறார்.
கி.பி.19ம்
நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து
வந்த மெஹர்பான்
அலிஸா கலீபா
கலாபத் ஒலியுள்ளா
என்பவர் பாவட்டந்
தீவில் குடிசை
அமைத்து வாழ்ந்து
வந்துள்ளார். இவர் உயிர் வாழ்ந்த காலத்தில்
இந்தியாவிலிருந்து வந்த பக்கீர்
வம்சத்தினர் இவருடன் தொடர்பு வைத்திருந்தனர்.
மெஹர்பான்
அலிஸா கலீபா
சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலுடன் நெருங்கிய
தொடர்பு வைத்திருந்ததோடு
சாய்ந்தமருது, காரைதீவு, மாவடிப்பள்ளி மக்களுடனும் மிக
அந்நியோன்யமாகப் பழகினார். இவர் பல அற்புதங்களையும்
செய்து காட்டியதாக
அறிய முடிகின்றது.
மெஹர்பான்
அலிஸா கலிபா
மரணித்த பின்னர்
அவர் வாழ்ந்த
வளவிலேயே அவர்
ஜனாஸா அடக்கம்
செய்யப்பட்டு சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசல்
உதவியுடன் ஒரு
சியாரம் அமைக்கப்பட்டது.
இதனைக் கவனிப்பதற்காக
சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலால் பக்கீர்மார்கள்
அமர்த்தப்பட்டார்கள். இவர்கள் வசிப்பதற்கு
ஒர் வீடும்
இங்கு கட்டப்பட்டது.
பக்கீர்மார்களுக்கு ஜீவனோபாயமாக நெற்காணியும்
வழங்கப்பட்டது.
1920ம் ஆண்டளவில் இவ்வளவில் சாய்ந்தமருதைச்
சேர்ந்த சிலர்
ஜும்ஆப்பள்ளிவாசலின் அனுமதியுடன் தற்காலிக
தேனீர் கடைகள்
கட்டி வியாபாரம்
செய்தார்கள். இக்கடைகள் இரவு பகலாகாத் திறந்திருந்து
போக்குவரத்து செய்வர்களுக்குஉதவியது.1940ம்
ஆண்டளவில் சாய்ந்தமருது
ஜும்ப்பள்ளிவாசல் ஆறு கடைகளை நிரந்தரமாகக் கட்டி
வாடகைக்குக் கொடுத்தது.
இந்த
சியாரத்தில் வருடம் தோறும் கொடியேற்றுதல், கந்தூரி
கொடுத்தல் என்பன
நடைபெற்று வந்தன.
காரைதீவு,சாய்ந்தமருது
மக்கள் இவ்வைபவத்தில்
பங்கெடுத்து வந்தார்கள். இது இம்மக்களிடையே இன
நல்லுறவைப் பலப்படுத்தியது.
போக்குவரத்து
செய்பவர்கள் சில சந்தர்ப்பங்களில் இங்கு தொழுதுவிட்டுச்
செல்வதுமுண்டு. இதன் காரணமாகவே இதனை தைக்கா
(சிறு பள்ளிவாசல்)
என அழைக்கப்பட்டது.
இப்பிரதேசம்
காரைதீவு கிராம
சபையின் ஆட்சிக்குள்
வந்தபின்னர் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் இவ்விடத்திற்கான
சோலை வரியை
காரைதீவு கிராம
சபைக்குச் செலுத்தி
பற்றுச்சீட்டுகள் பெற்றுள்ளது.
1957இல் ஏற்பட்ட பெரு வெள்ளம்,
1978இல் ஏற்பட்ட
சூறாவளி,என்பனவற்றால்
கடைகள், வீடு,
வேலிகள் என்பன
பலத்த சேதத்திற்குள்ளானது
ஆயினும் சியாரம்
பாதிக்கப்படவில்லை இவைகள் மீண்டும்
திருத்தியமைக்கப்பட்டன. இதற்கு அரச
உதவி சாய்ந்தமருது
ஜும்மா பள்ளிவாசல்
மூலமே கிடைத்தன.
காரைதீவு மக்களின்
ஒத்துழைப்பும் கிடைத்தது.
சியாரங்கள்
மற்றும் முஸ்லிம்
சமய ஸ்தலங்களுக்கான
அரச உதவிகள்
இப்பிரதேசத்தில் அமைந்திருந்த பல சியாரங்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் கண்டி மன்னர்கள் காலத்தில்
பல உதவிகள்
கிடைத்துள்ளன.கண்டி மன்னர்கள் இப்பிரதேசத்துக்கு விஜயம் செய்தபோது சியாரங்களையும் தரிசித்து
அவற்றிற்கு காணிகளை வழங்கியதாக நாடுகாடு பரவணி
கல்வெட்டில் காணப்படுவதாக கலாபூசணம் காசீம் ஜீ
குறிப்பிடுகிறார்.
போத்துக்கேய,டச்சு அரசாட்சிகளின்
போது துறைமுகம்களை
அண்டி வாழ்ந்த
முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டனர். ஆயினும்
ஆங்கிலேய ஆட்சியின்
போது முஸ்லிம்களின்
சமய,கலாசார,
பொருளாதார நடவடிக்கைகளுக்கு
ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.சுதந்திரத்திற்குப்பின்னர்
இலங்கை அரசுகளும்
முஸ்லிம்களின் சமய ஸ்தலங்களைப் பாதுகாப்பதில் உதவி
ஒத்தாசை வழங்கி
வந்துள்ளன.
18ம்
நூற்றாண்டில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் தலைமைகளாகவும்
சம்மாந்துறைப் பகுதி,கரைவாகுப் பகுதி,நிந்தவூர்
பகுதி,அக்கரைப்
பற்றுப் பகுதி,நாடுகாடுப் பற்று
ஆகிய பகுதிகளைச்
சேர்ந்த இஸலாமானவர்களின்
தலைமைக்காரர்களுமாக விளங்கிய தம்பி
நெய்ந்த காரியப்பர்
மற்றும் இஸ்மாலெப்பை
காரியப்பர் ஆகியோர்1830.10.18 இல் நெய்னா புலவன்
அகமது லெவ்வை
நொத்தரிஸினால் எழுதி முடிக்கப்பட்ட உறுதி இல:
264 மூலம் முஸ்லிம்களின்
ஐந்து சமய
ஸ்தலங்களையும் அதன் பாவனைக்காக 11 காணிகளையும (சுமார்;
120 ஏக்கர்) மாவடிப்பள்ளியில் வசித்த செய்யத் ஒமர்
மௌலானா அப்துல்
காதர் மௌலானாவுக்கு
எழுதிக் கொடுத்தார்கள்.
இவ்வுறுதியில்
குறிப்பிடடுள்ள ஐந்து சமயஸ்தலங்கள் பின்வருமாறு;
1. மாவடிப்பள்ளி.
2. மலுக்கன்பிட்டி
பள்ளி,
3. பாவட்டந்தீவுப்
பள்ளி,
4. தைக்காப்பள்ளி.
5. நார்ப்பட்டி
முனைப் பள்ளி;.
நெற்காணிகள
விபரம் பின்வருமாறு:-
• மாவடிப்பள்ளி
வெளி விரைப்பு——————————————-12
ஏக்கர்
• கரைச்சையிலவிசம்————————————————————–02
ஏக்கர்
• செட்டடியாவட்டை
பள்ளி இலவிசம்
விரைப்பு——————–01ஏக்கர்
• பாவட்டந்
தீவுப் பள்ளி
விரல் இலவிசம்
விரைப்பு————-20ஏக்கர்
• பாவட்டந்
தீவுப் பள்ளி
பெரிய இலவிசம்
விரைப்பு ———-02ஏக்கர்
• தைக்காப்
பள்ளி இலவிசம்
விரைப்ப ——————————15ஏக்கர்
• உடையார்
வெளிப் பள்ளி
இலவிசம் —————————— 10ஏக்கர்
• மலுக்கன்பிட்டி
பள்ளி முன்மாரி—————————————–
20ஏக்கர்
• அக்கரைப்
பள்ளி வெளி—————————————————-
15ஏக்கர்
• பள்ள
வெளிப் பங்கு
விரைப்பு —————————————- 13ஏக்கர்
• நார்ப்பட்டி
முனை பள்ளி
வெளி விரைப்பு—————————-10ஏக்கர்
பின்னர்
சம்மாந்துறை (மலுக்கன்பிட்டி), மாவடிப்பள்ளி,
நற்பிட்டிமுனை மக்கள் தமது பகுதியிலிலுள்ள தைக்காக்களை
தாங்களே பரிபாலிக்க
வேண்டும என்று
கோரியதைத் தொடர்ந்து
மூன்று தைக்காக்களும்
அவைக்குரிய நெற்காணிகளும் அவர்களுக்குப்
பிரித்துக் கொடுபட்டது. இதன் காரணமாக பாவட்டந்தீவு
-பக்கீர் சேனை
சியாரத்தையும் காரைதீவு முச்சந்தித் தைக்காவையும் பரிபாலிக்கும்
பொறுப்பு சாய்ந்தமருது
பெரிய பள்ளிவாசல்
நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.
ஆயினும்,
நெற்காணிகள் எவ்விதம் பகிhந்தளிக்கப்பட்டன அவை
தற்காலத்தில யார் வசம் உள்ளன என்பன
தெளிவில்லாமல் உள்ளது.(எதிர்காலத்தில் இது தொடர்பாக
ஆராய்ந்து பார்த்தல்
அவசியமாகும்.)
காரைதீவு
முச்சந்தித் தைக்கா (சியாரம்) வுக்கு எதிரான
செயற்பாடுகள் தனிப்பட்ட போட்டா போட்டிகள், குரோதங்கள்
காரணமாகவும் இன மோதல்கள் காரணமாகவும் பல
சந்தர்ப்பங்களில் இச் சியாரம் தாக்குதல்களுக்குள்ளானது. கி.பி.13ம் நூற்றாண்டில்
பொலநறுவ இராசதானியை
ஆண்ட பாண்டியன்
காலத்தில் இப்பிரதேசம்
பாதிப்புக்குள்ளானது.
உதுமானுக்கும்
சிவகாமிக்கும் இடையில் மலர்ந்த காதல்!
பாண்டியன்
படையெடுப்பு எனும் பாடலில் ‘ பக்கீர்சேனையை அழிக்க
வந்த பாண்டியன்
குடாக்கரை மக்களையுமவ்வூர்
மசூதியையும் அழித்தில்லாமாக்கினான்’ என கலாபூசணம் காசீம்
ஜீ தனது
‘தென்கிழக்கு முஸ்லிம்களின் மான்மியத்திற்கு
முன்னோரளித்த அருஞ்செல்வம்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
இதற்கான
காரணம் பக்கீர்சேனை
மரைக்கார் மகன்
உதுமானுக்கும் காரைதீவு சிவத்தம்பி பரிகாரி மகள்
சிவகாமிக்கும் இடையில் மலர்ந்த காதல் விவகாரமாகும்
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1957ம் ஆ;ண்டு பெப்ரவரி
மாதம் காரைதீவு
முச்சந்தி தைக்காவின்
வேலிகளைச் சில
விசமிகள் சேதப்படுத்தினர்.இது தொடர்பாக
கல்முனை நா.உ. கேட்
முதலியார் ஆ.ளு. காரியப்பர்
அரச அதிபருடன்
தொடர்பு கொண்டு
நடவடிக்கை எடுத்தார்.
1983ம் ஆண்டில் இச்சியாரம் தீயிடப்படடு
அதன் பாகங்கள்
களவாடப்பட்டன. இது தொடர்பாக இப்;பிரதேசத்தில்
அமைதிக் குலைவொன்று
ஏற்பட்டமையால் கல்முனை நவரத்னராசா தலைமையில் சமாதானக்
கூட்டம் ஒன்று
01.10.1983 இல் சம்மாந்துறை உதவி அரசாங்க அதிபர்
காரியாலத்தில் சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை,நிந்தவூர்
பிரதான தர்மகத்தாக்களின்
பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
இதனைத்
தொடர்ந்து 16.03.1984 இல் கிழக்குப்
பிராந்திய னுஐபு
கிங்ஸ்லி வீரசூரியவின்
தலைமையில் மேற்குறிப்பிட்ட
பிரமுகர்களுடன் நடந்த கூட்டத்தில் சியாரத்தின் காணிக்கு
வேலிபோட்டுப் பராமரிக்க சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல்
நிர்வாகத்திற்கு காரைதீவு மக்கள் எவ்வித தடையும்
ஏற்படுத்தக் கூடாதெனவும் தீர்மானிக்கப்பட்டு
ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அத்துடன்
சியாரத்துக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட
காரைதீவைச்சேர்ந்த சந்தேக நபர்களுக்கெதிராக
கல்முனை ஆரம்ப
நீதிமனறில் 85688 ம் இலக்கத்தில் வழக்குப் பதிவு
செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் முன்னாள் கிராம சபைத்
தலைவர்களான திரு.இ.வினாயகமூர்த்தி மற்றும்ம
டாக்டர் பரசுராமன்
ஆகியோரின் ஒத்துழைப்பு
குறிப்பிடத்தக்கது.
ஆயினும்
1988க்குப் பிறகு இவ்விடத்தைப் பரமரிப்பதில் டுவுவுநு
பல தடங்கல்களை
ஏற்படுத்தியது. 1988ம் ஆண்டில்
சியாரம், வீடு
கடைகள் வேலிகள்
என்பன முற்றாக
அழிக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டன. ளுவுகுஇளுடுஆஆ ஆகியவற்றின்
உதவியுடன் இவற்றை
மீளமைக்க சாய்ந்தமருது
ஜும்மா பள்ளிவாசல்
நிர்வாகம் பல
முயற்சிகள் எடுத்தும் வெற்றியளிக்கவில்லை.
போர்
முடிவுற்ற பின்னர்
சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் 14.08.2011 திகதியன்று இவ்வளவில் உள்ள தென்னை
மரங்களில் தேங்காய்
பறித்து நிலத்தையும்
செப்பனிட்டுள்ளது.;
இந்நிலையில்
06.09.2011 இல் காரைதீவு பிரதேச தலைவர் தலைமையில்
இவ்வளவில் அபிவிருத்தி
வேலைகள் செய்ய
எத்தனிக்கப்பட்டது.சாய்ந்தமருது ஜும்மா
பள்ளிவாசல் நிர்வாகம் எதிர்ப்புத்தெரிவித்ததைத்
தொடர்ந்து காரைதீவு
பிரதேச செயலாளர்தலைமையில்
சமாதான பேச்சுவார்த்தைகள்
ஆரம்பிக்கப்பட்டன.
தமிழர்
கூட்டணி- முஸ்லிம்
காங்கிரஸ் பேச்சுவார்த்தை
பின்னர்
தமிழர் கூட்டணி.
முஸ்லிம் காங்கிரஸ்
ஆகிய அரசியல்
கடசிகளின் பிரதிநிதிகளுடனும்
பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது தொடர்பாக சம்மாந்துறை பொலிஸிலும்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை
நில அளவைத்திணக்களம்
இக்காணியை அரச
காணியாக இனங்கண்டுள்ளதுடன்
காரைதீவு பிரதேச
செயலாளர் சமாதான
முயற்சியில் இருந்து தான் விலகுவதாகவும் நீதிமன்றம்
மூலம் தீர்மானமொன்றைப்
பெற்றுக் கொள்ளுமாறும்
அறிவித்துள்ளார்.
எதிர்காலத்தில்
சகவாழ்வுக்கும் இன நல்லுறவுக்குமான ஏற்பாடுகள் காரைதீவு
முச்சந்தி தைக்காவின்
பூர்வீகம், உரிமை மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக
காரைதீவைச் சேர்ந்த பல சிரேஷ்ட பிரஜைகள்
நன்கு அறிந்தவர்களாகவும்
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் அதனைப் பாதுகாத்துப்
பராமரிப்பதில் எதிர்ப்பற்றவர்களாகவும் இருந்தபோதும்
கடந்த கால
இன முறுகல்களும்
முஸ்லிம் கிராமங்களில்
இருந்த கோயில்கள்
சில சேதமாக்கப்பட்டது
அல்லது கைமாறப்பட்டது
போன்ற நிகழ்வுகள்
காரணமாகவுள்ள வெறுப்பு அல்லது காழ்ப்புணர்ச்சி இன
நல்லுறவுக்குப் பங்கமாகவுள்ளது.
இலங்கையில்
இனங்களுக்கிடையேயான இன முறுகல்
மூலம் ஏற்பட்டஅல்லது
ஏற்படும் வெறுப்பு
அல்லது காழ்ப்புணர்ச்சி
என்பது ஒருசாராருக்கு
மட்டும் ஏற்புடையதல்ல.
எல்லாச் சமூகங்களும்
வௌ;வேறு
சந்தர்ப்பங்களில் ஆக்கிரமிப்பவர்களாகவோ அல்லது
ஆக்கிரமிக்கப்படுபவர்களாவோ இருந்துள்ளார்கள்.
அதிகார
சபை
எனவே
கடந்தகாலங்களில் ஏற்பட்ட வடுக்களைத் தொடர்ந்தும் பெரிதுபடுத்தி
புதிய பரம்பரை
மத்தியில் மேலும்
இனக் காழ்ப்புணர்ச்சிகளை
ஏற்படுத்தாது மன்னிப்போம் மறப்போம் என வாழ வேண்டும்.
உலகில்
பல நாடுகளில்
அல்லது பல
பிரதேசங்களில் மிகச் சிறுபான்மையாக வாழும் இனத்தவர்களின்
சமய ஸ்தலங்கள்
அரசுகளால் அல்லது
அவ்வப்பிரதேச பிரதானிகளால் பாதுகாக்கப்பட்டு
வருவதையும் அதனைத் தரிசிக்க வருபவர்கள் மூலம்
அப்பிரதேசங்கள் பிரசித்தி பெறுவதோடு பொருளாதார இலாபங்களையும்
ஈட்டுகின்றன.
இந்தியாவில்
உள்ள பல
பிரசித்தி பெற்ற
முஸ்லிம் சியரங்கள்,
பங்களாதேசில் உள்ள இந்து ஆலயங்கள், இந்தோனீசியாவில்
உள்ள போபதூர்
பௌத்த ஸ்தூபி
என்பன இதற்கு
உதாரணமாகும்.
எனவே
எதிர்காலத்தில் காரைதீவு பிரதேச சபையும் சாய்ந்தமருது
பெரிய பள்ளிவாசல்
நிர்வாகமும் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு
பள்ளிவாசல் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்துரையாடி ஒரு
அதிகார சபையை
அமைத்து அதன்
மூலம் காரைதீவு
முச்சந்தி தைக்காவினை
பராமரிக்கவும் பரிபாலிக்கவும் ஏற்பாடுகள் செய்வதன் மூலம்
இப்பிரதேசத்தில் இன நல்லுறவை மேலோங்கச் செய்ய
முடியும்.
டாக்டர்
எம்.ஐ.எம்.ஜெமீல்,
தலைவர்,
சமாதானத்திற்கான
சமயங்களின் இலங்கைப் பேரவை.
அம்பாரை
மாவட்டம்
0 comments:
Post a Comment