உலகில் மூன்றில் ஒரு பங்கினர் 

'குண்டுதான்!

உலகில் மூன்றில் ஒரு பங்கினர் இப்போது உடல் பருமனாக உள்ளனர்; உலகில் எந்த ஒரு நாடும் கடந்த மூன்று தலைமுறைகளாக உடல் பருமனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை என்று உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில் தற்போது 2 பில்லியன் மக்கள் அதிக எடை அல்லது உடல் பருமனால் அவதிப் படுகின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதில் அதிக அளவு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ளதாகவும்அங்கு 60 முதல் 65 சதவீத பெண்கள் அதிக உடல் எடையால் சிரமப் படுகின்றனர் என்றும் ஆய்வு கூறுகிறது. உலகில் உடல் பருமன் அதிகமுள்ள மக்கள் தொகையில், அமெரிக்காவில் மட்டும் 13 சதவீதத்தினர் உள்ளதாகவும், இது உலகிலேயே மிக அதிகம் என்றும் தெரிகிறது. இந்தியாவும், சீனாவும் சேர்ந்து இந்த வகையில் 15% அளவுக்கு உடல்பருமன் உள்ளவர்களைக் கொண்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் உடல் நல அளவு மற்றும் மதிப்பிடுதல் துறையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் முரே, 1980ல் இருந்து 2013 வரை தனது சகாக்களுடன் 188 நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் 1700 சோதனை முடிவுகளுடன் ஆய்ந்து இந்த முடிவை அறிவித்துள்ளார். உடல் பருமன் என்ற தீவிர நிலையைத் தடுக்க எந்த நாட்டாலும் இயலவில்லை என்றும், இது மிகவும் சவாலான பணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு தகவலின்படி, வருமானத்துக்கும் உடல் பருமனுக்கும் தொடர்பு உள்ளதாம். பணக்காரத் தன்மை கொண்டவர்களின் வயிறும் பெரிதாகிவிடுகிறதாம். உடல் எடை அதிகம் இருந்தால், அதனுடன் நீரிழிவும், புற்றுநோயும் கைகோர்ப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

இந்தப் புதிய ஆய்வறிக்கை பில் & மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் உதவியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வு முடிவுகள் வியாழக்கிழமை இன்று லான்செட் ஜர்னலின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் விருப்பம்  மக்கள் விருப்பம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top