சீன விவசாயியால் கண்டுப்பிடிக்கப்பட்ட

சூட்கேஸ் ஸ்கூட்டர்

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தை சேர்ந்த ஹீ லியாங்கய், இவர் சூட்கேஸை கொண்டு பேட்டரியால் ஓடும் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தன்னையும், தன்னுடைய உடமைகளையும் கொண்டு செல்ல முடிவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தனது கண்டுபிடிப்பு குறித்து ஹீ லியாங்கய் கூறுகையில் :

 7 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டரில் இரண்டு பேர் பயணம் செய்யமுடியும். ஒரு மணி நேரத்திற்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் 20 கிலோமீட்டரை அந்த ஸ்கூட்டர் சென்றடையும். அதில் ஜி.பி.எஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளதுடன் அலாரமும் அமைக்கப்பட்டுள்ளது. பற்றரியால் இயங்குவதால் இதை ரீசார்ஜ் செய்யவேண்டும் என்ன்று தெரிவித்துள்ளார். விவசாயியான இவர் இந்த சூட்கேஸ் ஸ்கூட்டரை உருவாக்க 10 வருடங்கள் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top