தீவிரவாதி ஹபீஸ் சையதை
இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது :
பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவிப்பு இந்தியா அதிர்ச்சி
மும்பை
தீவிரவாத தாக்குதலில்
மூளையாக செயல்பட்டதாகச்
சந்தேகிக்கும் ஹபீஸ் சையதை இந்தியாவிடம்
ஒரு போது
ஒப்படைக்க முடியாது
என்று பாகிஸ்தான்
திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
டில்லி
சென்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், நரேந்திர
மோடியை நேற்று
சந்தித்து பேசினார்.
40 நிமிடங்கள் வரை நீடித்த இச்சந்திப்பின் போது
பாகிஸ்தானிலிருந்து எல்லைத் தாண்டிய
தீவிரவாதம் ஊக்குவிக்கப்படுவதற்கு மோடி
கவலை தெரிவித்தார்.
அத்துடன் மும்பை
தீவிரவாத தாக்குதல்
குறித்த விசாரணையை
துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த
சூழலில் மும்பை
தீவிரவாத தாக்குதலுக்கு
மூளையாக செயல்பட்டதாகக்
கூறப்படும் ஹபீஸ் சையதை
இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்று ஷெரிப்பின்
நெருங்கிய கூட்டாளியான
தாரிக் அசீம்கான்
கூறியுள்ளார். சையித் குற்றவாளி என்று நீதிதிமன்றம்
அறிவிக்கும் வரை அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க
முடியாது என்றும்
அவர் கூறியுள்ளார்.
சையிதுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் ஏதும்
இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார். நிழல் உலக
தாதா தாவூத்
இப்ராஹிம் பாகிஸ்தானில்
இல்லையென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மோடி- நவாஸ்
ஷெரிப் சந்திப்பு
நடைபெற்ற சிறிது
நேரத்திலேயே பாகிஸ்தான் இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment