கல்முனை மாநகர முதல்வரை
பொது மக்கள் சந்திப்பதற்கு புதன்கிழமை
ஒதுக்கீடு!
( அஸ்லம் எஸ் மெளலானா
)
கல்முனை
மாநகர சபையுடன்
தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில்
பொது மக்கள்
மாநகர முதல்வரை
நேரடியாக சந்தித்து
முறையிடுவதற்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் தற்பொழுது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் ஓவ்வொரு புதன்கிழமையும் காலை 9.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை மாநகர சபையில் அமைந்துள்ள முதல்வர் செயலகத்தில் மாநகர முதல்வரை பொது மக்கள் பிரத்தியேகமாக சந்திக்க முடியும் என அறிவிக்கப்படுகிறது.
அதேவேளை முதல்வருடனான பொது மக்களின் பிரத்தியேக சந்திப்பின் போது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும் ஏதுவாக அனைத்து அதிகாரிகளும் அன்றைய தினம் அலுவலகத்தில் கட்டாயம் கடமையில் இருக்க வேண்டும் என முதல்வர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன் மூலம் பொது மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் இலகுவாக தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன் வீண் அலைச்சல்களையும் கால விரயத்தையும் தவிர்த்துக் கொள்ள முடியும் என்று முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment