இன்று நடைபெறும் இரண்டாவது
குவாலிபயர் ஆட்டத்தில்
சென்னை - பஞ்சாப்
மோதல்
ஐபிஎல்
7வது சீசனின்
இரண்டாவது குவாலிபயர்
ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ்
லெவன் பஞ்சாப்
அணிகள் இன்று
மோதுகின்றன.
லீக்
சுற்றின் முடிவில்
முதலிடம் பிடித்த
கிங்ஸ் லெவன்
பஞ்சாப் அணி,
குவாலிபயர் 1 ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம்
தோற்றது. கொல்கத்தா
அணி நேரடியாக
இறுதிப் போட்டிக்கு
முன்னேறிய நிலையில்,
தோல்வியடைந்த பஞ்சாப் அணிக்கு மேலும் ஒரு
வாய்ப்பாக குவாலிபயர்
2 ஆட்டம் அமைந்துள்ளது.
கால் இறுதியாக
அமைந்த எலிமினேட்டர்
ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்
அணியை வீழ்த்திய
சூப்பர் கிங்ஸ்
அணியுடன் பஞ்சாப்
இன்று மோதுகிறது.
அரை இறுதி
ஆட்டமாக அமைந்துள்ள
இப்போட்டி ரசிகர்களின்
ஆவலை வெகுவாகத்
தூண்டியுள்ளது. பலம் வாய்ந்த மும்பை இந்தியன்சை
வீழ்த்திய உற்சாகத்துடன்
டோனி தலைமையிலான
சென்னை சூப்பர்
கிங்ஸ் அணி
இறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்குகிறது.
ஸ்மித்,
டுபிளெஸ்சிஸ், மெக்கல்லம், ரெய்னா, டோனி, ஜடேஜா
என்று அதிரடி
வீரர்கள் அதிகமுள்ளதால்
சென்னை பேட்ஸ்மேன்களை
கட்டுப்படுத்துவது பஞ்சாப் பந்து வீச்சாளர்களுக்கு
சவாலாகவே இருக்கும். அதே சமயம்,
ஜார்ஜ் பெய்லி
தலைமையிலான பஞ்சாப் அணியிலும் அதிரடி ஆட்டக்காரர்களுக்கு
பஞ்சமில்லை என்பதால், ஆட்டத்தின் அனல் பறக்கும்
என்பதில் சந்தேகமில்லை.
மும்பை, வாங்கடே ஸ்டேடியத்தில் இரவு 8.00 மணிக்கு
தொடங்கும் இந்த
போட்டியில் வென்றுஇறுதிப் போட்டிக்கு முன்னேறப் போவது
எந்த கிங்ஸ்?
என்பதை தெரிந்து
கொள்ள ரசிகர்கள்
ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
சென்னை
சூப்பர் கிங்ஸ்:
எம்.எஸ்.டோனி (கேப்டன்),
வேய்ன் ஸ்மித்,
டேவிட் ஹஸி,
பேப் டு
பிளெஸ்சிஸ், பாபா அபராஜித், ஆர்.அஷ்வின்,
சாமுவேல் பத்ரீ,
ஜான் ஹேஸ்டிங்ஸ்,
மேட் ஹென்றி,
பென் ஹில்பென்ஹாஸ்,
ரவீந்திர ஜடேஜா,
பிரெண்டன் மெக்கல்லம்,
மிதுன் மன்ஹாஸ்,
ரோனித் மோரே,
பவான் நேகி,
ஆசிஷ் நெஹ்ரா,
ஈஷ்வர் பாண்டே,
சுரேஷ் ரெய்னா,
விஜய் ஷங்கர்,
மோகித் ஷர்மா.
கிங்ஸ்
லெவன் பஞ்சாப்:
ஜார்ஜ் பெய்லி
(கேப்டன்), வீரேந்திர சேவக், அனுரீத் சிங்,
பர்விந்தர் அவானா, லஷ்மிபதி பாலாஜி, ரிஷி
தவான், குர்கீரத்
சிங் மான்,
பியூரன் ஹெண்ட்ரிக்ஸ்,
மிட்செல் ஜான்சன்,
கரண்வீர் சிங்,
முரளி கார்த்திக்,
மன்தீப் சிங்,
ஷான் மார்ஷ்,
கிளென் மேக்ஸ்வெல்,
டேவிட் மில்லர்,
அக்ஷர் பட்டேல்,
செதேஷ்வர் புஜாரா,
விருத்திமான் சாஹா, சந்தீப் ஷர்மா, ஷிவம்
ஷர்மா, ஷர்துல்
தாகுர், மனன்
வோரா.
0 comments:
Post a Comment